ads

நடிகர் ஜீவாவின் கீ படத்தின் ரிலீஸ் தேதி

kee movie release at February 9th trailer audio coming soon

kee movie release at February 9th trailer audio coming soon

நடிகர் ஜீவா நடிப்பில் தற்போது உருவாகிவரும் படம் 'கீ'. இந்த படத்தை இயக்குனர் காலீஸ் எழுதி இயக்குகிறார். இவர் இயக்குனர் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர். இந்த படத்தை குளோபல் இன்போடெய்ன்மெண்ட் சார்பில் மைக்கல் ராயப்பன் தயாரித்து வருகிறார். அபிநந்தன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை நகுரன் மேற்கொள்கிறார். இந்த படத்தில் நடிகர் ஜீவாவிற்கு ஜோடியாக நடிகை நிக்கி கல்ராணி நடித்து வருகிறார். 

மேலும் இவர்களுடன் ஆர்ஜே பாலாஜி, அனைக்கா சொட்டி, கோவிந்த் பத்மசூர்யா, ராஜேந்திர பிரசாத், சுஹாசினி, மனோபாலா, மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இணைந்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தை தணிக்கை வாரியத்திற்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழு இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தெரிவித்துள்ளது. காமெடி கலந்த குடும்ப படமாக உருவாகி வரும் இந்த படத்தை காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் இசையை விரைவில் வெளியிட உள்ளனர்.

kee movie release at February 9th trailer audio coming soonkee movie release at February 9th trailer audio coming soon
kee movie release at February 9th trailer audio coming soonkee movie release at February 9th trailer audio coming soon

நடிகர் ஜீவாவின் கீ படத்தின் ரிலீஸ் தேதி