ads
சேலம் எட்டுவழிச்சாலை மையமாக வைத்து உருவாகும் கிஷோரின் பசுமை வழிச்சாலை
விக்னேஷ் (Author) Published Date : Oct 08, 2018 15:24 ISTபொழுதுபோக்கு
சென்னைக்கும் சேலத்திற்கும் இடையே 10 ஆயிரம் கோடி செலவில் புதிதாக எட்டுவழிச்சாலை அமையவுள்ளது. இதற்காக விவசாய நிலங்கள், வீடுகள், மலைகள், லட்சக்கணக்கான மரங்கள் போன்ற அனைத்தையும் அழிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதனால் இந்த பசுமைவழி சாலைக்காக பொது மக்களிடம் இருந்து பலத்த எதிர்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. தற்போது உயர்நீதி மன்றத்தில் இந்த பசுமை வழிச்சாலை குறித்த வழக்கு நடந்து கொண்டு வருகிறது.
இந்நிலையில் இந்த பசுமை வழிச்சாலை எதற்காக, ஏன் என்பதை உணர்த்தும் விதமாக படம் ஒன்று உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு 'பசுமைவழி சாலை' என்றே தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் கிஷோர் மற்றும் பசுபதி ஆகியோர் நாயகர்களாக நடித்து வருகின்றனர். முன்னதாக இந்த படத்தின் படப்பிடிப்பை ஜம்மு காஷ்மீர், திபெத், பூடான், நேபாளம் போன்ற இடங்களில் தொடர்ந்து 15 நாட்கள் நடத்தியுள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பினை கடுங்குளிர் நிறைந்த இமயமலை பிரதேசங்களில் ஆபத்தான சூழ்நிலை நிலவியபோதும் தொடர்ந்து நடத்தியுள்ளனர். இதுவரை படப்பிடிப்பு நடக்காத காடுகள், மலைகள் போன்ற இடங்களை தேர்வு செய்து மும்முரமாக படப்பிடிப்பினை நிகழ்த்தி வருகின்றனர். மேலும் ஜம்மு காஷ்மீரில் ராணுவ தளத்திற்கு அருகே சிறப்பு அனுமதி பெற்று வான்வழி காட்சிகளையும் எடுத்துள்ளனர். இந்த படத்தினை சத்துவா ப்ரொடக்சன் நிருவனம் தயாரித்து வருகிறது. சந்தோஷ் கோபால் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.