ads

ஆவி குமார் உதயாவின் - உத்தரவு மகாராஜா

utharavu maharaja new movie

utharavu maharaja new movie

ஆவி குமார் படத்தில் நாயகனாக நடித்திருந்த உதயா தற்பொழுது  நகைச்சுவை, ஆக்‌ஷன் கலந்த சைக்கோ த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். புது முக இயக்குனர் ஆஸிப் குரைஷி இயக்கி வரும் ‘உத்தரவு மகாராஜா’ முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் உருவாகிவுள்ளது. இந்த படத்தில் பிரியங்கா, சேரா, நிஷா என மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். மேலும் இவர்களுடன் இணைந்து நாசர், கோவை சரளா, ஸ்ரீமன், மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், சரவணன், தனஞ்செயன், ‘தளபதி’ தினேஷ், சோனியா போஸ், பிரேம் நடிப்பதோடு பிரபு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். 

 ‘ஓ நாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த பாலாஜி ரங்கா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தில் புது வித முயற்சியை இயக்குனர் ஆஸிப் குரைஷி கையாண்டு இருப்பதாக படக்குழுவினர் கூறியுள்ளனர். நரேன் பாலகுமாரன் இசை அமைக்கும் இந்த படத்தில்  படத்தொகுப்பை சத்யநாராயணன் கவனிக்கிறார். 

ஆவி குமார் உதயாவின் - உத்தரவு மகாராஜா