ads

இந்திரா காந்தி கதாபத்திரத்தில் நடிகை வித்யா பாலன்

vidhya balan plays on indira gandhi role

vidhya balan plays on indira gandhi role

இந்திரா காந்தி (இந்திரா பிரியதர்சினி காந்தி) இந்தியாவின் மூன்றாவது பிரதமரும், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார். இவரது இயற்பெயர் இந்திரா பிரியதர்சினி நேரு, ஃபெரோஸ் காந்தியுடனான திருமணத்திற்கு பின் இந்திரா பிரியதர்சினி காந்தியாக மாறினார், சுருக்கமாக இந்திரா காந்தி. இந்தியாவின் இரண்டாவது பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியைத் தொடர்ந்து சில நாட்கள் தற்காலிகப் பதவி வகித்த குல்சாரிலால் நந்தாவுக்குப் பின்னர் ஜனவரி 19 1966 இல், பிரதம மந்திரியாகப் பதவியேற்ற இவர் மார்ச் 24 1977 வரை பதவியில் இருந்தார்.

1977 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியடைந்த இவர் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். 14 ஜனவரி 1980 ல் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்ட இவர் 1984 இல் கொலை செய்யப்படும் வரை பதவியில் இருந்தார். இவர் இந்தியாவின் முதல் மற்றும் கடைசி பெண் பிரதமர் ஆவார். பிரபல எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளரான சகாரிகா கோஷ், இந்தியாவின் 'இரும்பு பெண்மணி' என்றழைக்கப்படும் இந்திரா காந்தியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு 'இந்திரா: இந்தியாவின் சக்தி வாய்ந்த பிரதமர்' என்ற நூலினை எழுதி வெளியிட்டிருந்தார்.

இந்த நூலினை திரைப்படமாக வெளியிடுவதற்கான உரிமையை ராய் கபூர் ப்ரொடக்சன் நிறுவனத்துடன் இணைந்து தேசிய விருது பெற்ற வித்யா பாலன் சகாரிகா கோஷிடமிருந்து விலைக்கு வாங்கியுள்ளார். இது குறித்த அறிவிப்பை சகாரிகா கோஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கப்படுவதற்காக பெருமைப்படுகிறேன். இந்த படத்தில் இந்திரா காந்தியாக நடிப்பதற்கு எனக்கு ஆர்வம் உள்ளது. ஆனால் இது குறித்து முடிவு செய்யப்படவில்லை. விரைவில் இந்த படத்தின் தகவலை வெளியிடுவதாக நடிகை வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.

இந்திரா காந்தி கதாபத்திரத்தில் நடிகை வித்யா பாலன்