கந்து வட்டி பிரச்சனையினால் முதல்வரை சந்திப்பு - விஷால் பேட்டி
ராசு (Author) Published Date : Nov 28, 2017 13:15 ISTபொழுதுபோக்கு
தமிழ் திரைப்படத்தின் தயாரிப்பாளர், தயாரிப்பு சங்க தலைவர்,மற்றும் நடிகரான விஷால் தற்பொழுது பிஎஸ்.மித்ரன் இயக்கத்தில் இரும்பு திரை படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. நேற்று நெல்லை ரயில் நிலைய பகுதியில் படப்பிப்புகள் நடைபெறும் போது பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த விஷால் பின் வருமாறு கூறியுள்ளார்.
கந்து வட்டி பிரச்சனையினால் தமிழ் சினிமாவில் பணிபுரியும் அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். இதன் காரணத்தினால் நல்ல தயாரிப்பாளரான அசோக் குமார் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிகழ்வை முடிவு கட்டும் விதமாக முதல்வரை சந்தித்து கந்து வட்டி பிரச்சனையை குறித்து பேசப்போவதாக விஷால் கூறியுள்ளார்.
கந்து வட்டி ஒழிப்பதற்கு கடுமையான சட்டம் தேவைப்படுகிறது. இதற்கு தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் சினிமாவில் தற்பொழுது மீட்டர் வட்டி, ஸ்பீட் வட்டி என பல வட்டிகள் வசூலிக்கும் பைனான்சியரை மூன்று பேராவது தண்டிக்கப்பட்டால் தான் மற்றவர்களுக்கு பயம் வரும். அன்பு செழியனை பிடிப்பதற்கு அரசாங்கம் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதன் தொடர்பாக முதலமைச்சரை தயாரிப்பாளர் சங்கத்தினர் அனைவரும் சந்திக்க இருக்கிறோம் என்று கூறினார்