தான் இயக்கும் யாளி படம் குறித்து மனம் திறந்த கலாபக்காதலி

       பதிவு : May 07, 2018 14:19 IST    
நடிகை அக்ஷயா தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். நடிகை அக்ஷயா தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.

மாடல் அழகி மற்றும் நடிகையான அக்ஷயா, ஆர்யா நடிப்பில் 2006இல் வெளியான 'கலாபக்காதலன்' படத்தின் மூலம் பிரபலமானவர். இவர் இதற்கு முன்னதாக சிம்ரனின் கோவில்பட்டி வீரலட்சுமி, துள்ளும் காலம், பார்த்திபன் கனவு போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படங்களுக்கு பிறகு பழனியப்பா கல்லூரி, உளியின் ஓசை, கஜா, விஜயகாந்தின் எங்கள் ஆசான் போன்ற படங்களில் நடித்திருந்தார். இது தவிர இந்தியிலும் ' Umformung: The Transformation' என்ற படத்தின் மூலம் கடந்த 2016இல் அறிமுகமாகியுள்ளார்.

திரையுலகில் சிறு சிறு துணை கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் தற்போது இயக்குனவராக அவதாரம் எடுத்துள்ளார். உயர்திரு 420 என்ற படத்திற்கு பிறகு இவர் 'யாளி' என்ற படத்தை இயக்கி நாயகியாகவும் நடித்து வருகிறார். இந்த படம் குறித்து மனம் திறந்த அவர் "தமிழ் சினிமா உலகில் பெண் இயக்குனர்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கின்றது. இந்த பட்டியலில் நானும் இணைத்துள்ளேன். தற்போது உருவாகி வரும் யாளி படம் காதல் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் நாயகியாக நானும், நாயகனாக தமனும் நடித்து வருகிறார்.

 

இது தவிர இந்த படத்தில் அர்ஜுன் என்ற புதுமுக நடிகர் அறிமுகமாகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நாயகனும், நாயகியும் காதலித்து வருகின்றனர். இதில் நாயகியை அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் பின்தொடர்கிறார். இதன் பிறகு மும்பையில் சில கொலை சம்பவங்களும் நடக்கின்றது. இந்த படத்தில் நாயகியை எதற்கு மர்ம நபர் துரத்துகிறார், இந்த கொலை சம்பவங்களுக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு என்பதே படத்தின் கதை. " என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, மும்பை, மலேசியா போன்ற இடங்களில் நடக்க உள்ளது. இந்த படம் வரும் ஜூலை மாதம் திரைக்கு வரவுள்ளது. மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் ஜூன் மாதத்தில் பிரமாண்டமாக படக்குழு நடத்தவுள்ளது.


தான் இயக்கும் யாளி படம் குறித்து மனம் திறந்த கலாபக்காதலி


செய்தியாளர் பற்றி

விக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார். ... மேலும் படிக்க

Vignesh writer and reporter

விக்னேஷ்செய்தியாளர்