என்மகள் எந்த படத்திலும் நடிக்கவில்லை நடிகை கவுதமி விளக்கம்

       பதிவு : Mar 13, 2018 15:00 IST    
கவுதமி மகள் சுப்புலட்சுமி வர்மா படத்தில் நடிப்பதாக வெளியான தகவலை கவுதமி மறுத்துள்ளார். கவுதமி மகள் சுப்புலட்சுமி வர்மா படத்தில் நடிப்பதாக வெளியான தகவலை கவுதமி மறுத்துள்ளார்.

இயக்குனர் பாலா இயக்கத்தில் 'நாச்சியார்' படத்தை தொடர்ந்து தற்போது 'வர்மா' படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நேபாளத்தில் நடந்து வருகிறது. இந்த படத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக நடித்து வருகிறார்.  இந்த படத்தின் நாயகி குறித்து தேர்வு சமீபத்தில் நடந்து வந்த நிலையில் இந்த படத்தில் நடிகை கவுதமி மகள் சுப்புலட்சுமி நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இதனை நடிகை கவுதமி தற்போது மறுத்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டரில் 'என் மகள் சினிமாவில் நடிப்பதாக செய்திகள் வெளிவருகிறது. சுப்புலட்சுமி தற்போது படிப்பில் மிகுந்த ஈடுபாடுடன் கவனம் செலுத்தி வருகிறார். அவருக்கு தற்போது நடிப்பது குறித்து எந்த எண்ணமும் இல்லை. அவர் மீதுள்ள உங்களுடைய அனுதாபங்களுக்கு நன்றி' என்று அவர் தெரிவித்துள்ளார். 

 

மேலும் "நான் அரசியல் சார்ந்த கருத்துக்கள் தெரிவிப்பதனால் நான் அரசியலில் ஈடுபட உள்ளதாக நினைக்க வேண்டாம். அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கு இருந்ததில்லை. நான் நானாகவே இருந்து விடுகிறேன்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


என்மகள் எந்த படத்திலும் நடிக்கவில்லை நடிகை கவுதமி விளக்கம்


செய்தியாளர் பற்றி

விக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார். ... மேலும் படிக்க

Vignesh writer and reporter

விக்னேஷ்செய்தியாளர்