ads

வைரலாகும் நடிகை ஷ்ரேயாவின் திருமண புகைப்படங்கள்

கடந்த மார்ச் 12ஆம் தேதி நடிகை ஷ்ரேயா ரஷ்ய தொழிலதிபரை மணந்துள்ளார்.

கடந்த மார்ச் 12ஆம் தேதி நடிகை ஷ்ரேயா ரஷ்ய தொழிலதிபரை மணந்துள்ளார்.

நடிகை ஷ்ரேயா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்குகிறார். இவரது நடிப்பில் இறுதியாக கடந்த பிப்ரவரி மாதத்தில் 'காயத்ரி' என்ற படம் வெளியானது. தெலுங்கு மொழியில் வெளியான இந்த படத்தை இயக்குனர் மதன் இயக்கி இருந்தார்.

33 வயதான இவர் ரஷ்ய தொழிலதிபரான அந்த்ரேய் கொஷீவ் என்பவரை காதலித்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் பரவியது. இதனை உறுதி படுத்தும் விதமாக அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களும் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் தற்போது இவர் கடந்த மார்ச் 12-ஆம் தேதி தனது ரஷ்ய காதலனை மணந்துள்ளார். ரகசியமாக நடந்த இந்த திருமணத்தில் ஒரு சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். இந்நிலையில் தற்போது இவரின் திருமண புகைப்படங்களும் வீடியோ காட்சிகளும் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

நடிகை ஷ்ரேயாவின் திருமண புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.நடிகை ஷ்ரேயாவின் திருமண புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

வைரலாகும் நடிகை ஷ்ரேயாவின் திருமண புகைப்படங்கள்