Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு தேதியை வெளியிட்ட படக்குழு

ajith viswasam shoot from february 22nd

தல அஜித்தின் 58வது படமான 'விசுவாசம்' படத்தினை சிறுத்தை சிவா இயக்கவுள்ளார். வீரம், வேதாளம், விவேகம் வெற்றியை தொடர்ந்து நான்காவது முறையாக இணைந்துள்ள இக்கூட்டணியில் அஜித் இளைமையான தோற்றத்தில் நடிக்கவுள்ளார். கடந்த சில நாட்களாக பரவி வரும் தல அஜித்தின் புது கெட்டப் வீடியோ, புகைப்படம் போன்றவை ரசிகர்கள் மத்தியில் வெகுவான அளவிற்கு வரவேற்பினை பெற்று வரும் இந்நிலையில் படத்தின் முக்கிய தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் படத்தின் படப்பிடிப்பு வருகிற பிப்ரவரி 22ம் தேதியில் துவங்கவிருப்பதாக அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளனர்.         

'வீரம்' படம் சகோதர்களை மையப்படுத்தியும் 'வேதாளம்' தங்கையின் பாசத்தினை மையப்படுத்தியும் 'விவேகம்'  மனைவி மற்றும் சிறந்த நட்பினை மையாகவும் உருவானது. தற்பொழுது 'விசுவாசம்' எதனை மையமாக வைத்து உருவாக உள்ளது என்று ரசிகர்களிடம் கேள்விகள் எழும்பிய நிலையில் உள்ளது. சில ரசிகர்கள் படத்தின் தலைப்பு 'விசுவாசம்' என்பதால் விசுவாசத்தை மையமாக கொண்டு உருவாகலாம் என கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

'விவேகம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து 'சத்யஜோதி ஃபிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனம் தல அஜித்தின் விசுவாசம் படத்தினை பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. மேலும் இப்படத்தில் வெற்றி ஒளிப்பதிவு பணியில் ஈடுபட ரூபன் படத்தொகுப்பு பணியை மேற்கொள்ள இருக்கிறார். இந்நிலையில் படத்தின் இசையமைக்கும் பணியில் அனிருத் இணையலாம் என தகவல்கள் வந்துள்ளது. இந்த தகவலின் அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.     

விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு தேதியை வெளியிட்ட படக்குழு