ads

முதலையின் மீது படுத்து புகைப்படம் எடுத்த அக்ஷரா ஹாசன்

கமல் ஹாசன் மகளான அக்ஷரா ஹாசன், தனது அப்பாவுடன் இணைந்து சபாஷ் நாயுடு படத்தில் இணை இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் முதலையுடன் படுத்து புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

கமல் ஹாசன் மகளான அக்ஷரா ஹாசன், தனது அப்பாவுடன் இணைந்து சபாஷ் நாயுடு படத்தில் இணை இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் முதலையுடன் படுத்து புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அஜித்தின் விவேகம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு என்ட்ரி கொடுத்தவர் அக்ஷரா ஹாசன் (26). கமல் ஹாசன் மகள் மற்றும் ஸ்ருதி ஹாசனின் தங்கையான இவர் கடந்த 2015இல் ஷமிதாப் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் இது வரை மூன்று படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இதுவரை இவரது நடிப்பில் இந்தியில் இரண்டு படமும் தமிழில் விவேகம் படமும் வெளியாகியுள்ளது. இவர் தற்போது தனது அப்பாவுடன் இணைந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் உருவாகி வரும் 'சபாஷ் நாய்டு' இணை இயக்குனராக பணிபுரிந்து வருகிறார்.

திரைக்குடும்பத்தில் பிறந்தவரான இவர் நடிகை, இணை இயக்குனர் என தனது திறமைகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் முதலையின் மேல் படுத்து புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்ட்டாகிராமில் வெளியிட்டுள்ளார். தற்போது இவரது புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் இவரது தைரியத்தை பாராட்டி வருவதால் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. ஆனால் இந்த முதலை உண்மையானதே இல்லை, பார்ப்பதற்கு உண்மையானதாகவும், திகிலாகவும் இருப்பதால் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

முதலையின் மீது படுத்து புகைப்படம் எடுத்த அக்ஷரா ஹாசன்