Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

அண்ணாதுரை படத்தின் முக்கிய பதிப்பு

annadurai movie stills

'பிச்சைக்காரன்' படத்தின் மூலம் புகழ் பெற்ற விஜய் ஆண்டனி அண்ணாதுரை, காளி போன்ற படங்களில் நடித்து வருகிறார். ஜி.ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நவம்பர் 30ம் தேதி வெளிவரவிருக்கும் அண்ணாதுரை படத்தில் டயானா சாம்பிகா, மஹிமா, ஜுவல் மெரி என மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். ராதிகா சரத்குமார் ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் விஜய் ஆன்டனி பிலிம் கார்பரேஷனும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனி இசையமைப்பாளராகவும், இதனை தொடர்ந்து முதல் முதலில் எடிட்டிங் பணியில் ஈடுபட்டுள்ளார்.       

பர்ஸ்ட் லுக், டீசர், இசை போன்றவை வெளிவந்து நல்ல வரவேற்பினை பெற்றது. இந்நிலையில் விஜய் ஆண்டனி இப்படத்தின் மூலம் பல விஷயங்களில் முதல் முதலாக ஈடுபட்டிருப்பது தெரியவருகிறது. எடிட்டிங்கில் தொடர்ந்து படத்தில் வரும் கேரக்டரிலும் இரு வேடத்தில் நடித்திருக்கிறாராம். இவர் நடித்த படங்களில் முதல் முதலாக இரு கதாபாத்திரத்தில் நடிக்கும் முதல் படம் அண்ணாதுரை என்பது குறிப்பிடத்தக்கது. 

 இதில் அண்ணாதுரை, தம்பி துறை என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் ஆண்டனி, அண்ணாதுரை மெய்ன் கேரக்டராகவும், தம்பி திரை பிளாஷ்பாக் கேரக்டராகவும் நடிக்கிறாராம். மூன்று நாயகிகளில் ஒருவர் தங்கையாக நடிக்கிறார். அண்ணனை இழந்து தவிக்கும் ஒரு குடும்பத்திற்கு அண்ணனாக விஜய் ஆண்டனி சென்று அங்குள்ள பிரச்சனைகளை சமாளிக்கும் சம்பவங்களே படத்தின் கருத்து.              

அண்ணாதுரை படத்தின் முக்கிய பதிப்பு