ads

தனுஷ் இயக்கும் படத்தில் மற்றொரு கதாநாயகியாக இணைந்த அனு இமானுவேல்

பவர் பாண்டி படத்திற்கு பிறகு தனுஷ் தனது அடுத்த படைப்பிற்காக மும்முரமாக களமிறங்கியுள்ளார். பல முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ள இந்த படத்தில் அனு இமானுவேல் மற்றொரு கதாநாயகியாக இணைந்துள்ளார்.

பவர் பாண்டி படத்திற்கு பிறகு தனுஷ் தனது அடுத்த படைப்பிற்காக மும்முரமாக களமிறங்கியுள்ளார். பல முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ள இந்த படத்தில் அனு இமானுவேல் மற்றொரு கதாநாயகியாக இணைந்துள்ளார்.

நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக உருவாகி வரும் தனுஷ் தற்போது 'பவர் பாண்டி' படத்திற்கு பிறகு தன்னுடைய இரண்டாவது படத்தை இயக்கும் பணிகளில் மும்முரமாக களமிறங்கியுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு  சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் நாகர்ஜுனா, சரத்குமார், ஸ்ரீகாந்த், எஸ்ஜே சூர்யா, அதிதி ராவ் போன்ற பல முன்னனி நடிகர் நடிகைகள் இணைந்துள்ளனர்.

தற்போது இந்த படத்தில் மற்றொரு கதாநாயகியாக நடிகை அனு இமானுவேல் இணைந்துள்ளார். இவர் மலையாள நடிகையாக இருந்தாலும் தெலுங்கு சினிமாவில் இவருக்கு ஏராளமான வரவேற்புகள் இருந்து வருகிறது. இவர் தமிழ் திரையுலகிற்கு விஷாலின் 'துப்பறிவாளன்' படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு தமிழில் தன்னுடைய இரண்டாவது படத்திற்கு தனுசுடன் இணைந்துள்ளார். மேலும் இந்த படத்தில் தனுசும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தனுஷ் இயக்கும் படத்தில் மற்றொரு கதாநாயகியாக இணைந்த அனு இமானுவேல்