ads
மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை அரியலூர் அனிதா அவர்களின் கதையில் ஜூலி
விக்னேஷ் (Author) Published Date : Mar 06, 2018 09:55 ISTபொழுதுபோக்கு
அரியலூர் அனிதாவை தமிழ் மக்கள் யாரும் மறந்திருக்க முடியாது. தமிழகத்தில் நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தபின் மருத்துவர் ஆகும் எண்ணத்தில் இருந்த மாணவி அனிதாவிற்கு தற்கொலை ஒன்றே தீர்வாக அமைந்தது. இந்த சம்பவம் மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது, போராடவும் செய்தது ஆனால் நீட் இறுதியில் வென்றது.
வசதி இல்லாத குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அவரின் எண்ணங்கள் மிக உயர்வாகவே இருந்தது, மருத்துவம் படித்துவிடடது தம்மால் முடிந்த உதவியை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பது. படிப்பில் மாநிலங்கள் அளவில் முதலிடத்தை பிடித்த மாணவர்கள் இதையே கூறுவர் ஆனால் எத்தனை பேர் இதை நிறைவேற்றுனார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். ஆனால் அனிதா உறுதியாக செய்து காட்டக்கூடிய மன உறுதியுடன் இருந்தார், காலம் அவருக்கு உறுதியளிக்க முடியவில்லை.
அனிதாவின் பிறந்த நாளான நேற்று அவரின் சுயசரிதையை திரைப்படமாக்கி மக்களுக்கு உணர்த்த நினைத்த இயக்குனர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி ஆனால் அவருக்கான நடிகையை தேர்வு செய்ததில் மக்கள் சற்று கோபம் கொண்டு தங்களது கருத்தை பல்வேறு வகையில் வெளிப்படுத்தினர். போன வருடம் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போராடிய தமிழ் மக்களை அடையாளம் தெரியாத ஊடகங்களுக்கு ஏனோ ஜூலி என்னும் பெண்ணை பிரபல படுத்தினார்கள். அவர் ஜல்லிக்கட்டின் உண்மையான நோக்கத்தில் போராடினார் என்பதை விட அரசியல் பிரபலங்களை வாய்க்கு வந்தபடி பேசினார். ஜல்லிக்கட்டில் போராடிய இளைஞர்கள் பெரும்பாலானோர் ஜல்லிக்கட்டின் மகத்துவத்தை பற்றியும் எடுத்துரைத்தனர் ஆனால் இவரோ வேறு முறையில் போராடினார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்று, தனது ரியாலிட்டி ஷோவ்விற்கு இவரை கலந்துகொள்ள வைத்தது. இவரின் உண்மையான குணத்தின் வெளிப்பாட்டினால் தமிழகத்தில் பெரும்பாலான மக்களுக்கு இவரை பிடிக்காமல் போனது, அதற்கு காரணம் இவரிடம் உண்மையான அன்பு இல்லை என்பதே என்று நமது நிருபரிடம் மக்கள் கூறினார்கள். இப்படி இருக்கையில் மாணவி அனிதா போன்ற பெண்களின் வாழ்கை வரலாற்றில் நடிப்பதில் எங்களால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று தங்களது மனக்குறையை வெளிப்படுத்துகிறார்கள்.
பொதுவாக படத்தின் வியாபாரத்திற்க்காக பிரபலமானவர்களை அணுகுவது நல்லதே ஆனால் வேறு ஒருவரை தேர்வு செய்து இருக்கலாம் என்று மக்கள் கருதுகின்றனர்.