ads

அருண் விஜயின் தடம் படத்தின் முக்கிய அறிவிப்பு

நடிகர் அருண் விஜயின் தடம் படக்குழு முக்கிய அறிவிப்பினை வெளியிட உள்ளது.

நடிகர் அருண் விஜயின் தடம் படக்குழு முக்கிய அறிவிப்பினை வெளியிட உள்ளது.

குற்றம் 23 படத்தின் வெற்றிக்கு பிறகு அருண்விஜய் நடிப்பில் தடம், சாஹு, செக்க சிவந்த வானம் போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் 'தடம்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இயக்குனர் மகிழ் திருமேனி முன்னதாக அருண் விஜயின் தடையற தாக்க, ஆர்யாவின் மீகாமன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவரின் நான்காவது படமான இந்த படத்தில் இரண்டாவது முறையாக அருண் விஜய் நாயகனாக நடித்து வருகிறார்.

இவருக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடித்து வருகிறார். இவர்களுடன் ஸ்முருதி, பெப்சி விஜயன், யோகி பாபு, ஜார்ஜ், சோனியா அகர்வால், ஜார்ஜ், வித்யா பிரதீப், மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'குற்றம் 23' படத்தின் தயாரிப்பாளரான இந்தர் குமார் இந்த படத்தையும் தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் அளித்துள்ளது. இந்த படத்தின் இசை மற்றும் வெளியீடு தேதியினை விரைவில் படக்குழு அறிவிக்க உள்ளது. நீண்ட நாட்களுக்கு உருவாகி வரும் இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர். 

அருண் விஜயின் தடம் படத்தின் முக்கிய அறிவிப்பு

அருண் விஜயின் தடம் படத்தின் முக்கிய அறிவிப்பு