Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

இந்தியா பாகிஸ்தான் இயக்குனருடன் இணையும் அதர்வா

atharvaa next movie

பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'செம போத ஆகாதே'. இந்த படத்தில் மிஷ்டி நாயகியக நடித்துள்ளார். மேலும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இவர் இசையில் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த செம போத ஆகாதே, ஐடெம்காரன் பாடல் மற்றும் படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இந்நிலையில் இப்படத்தினை தொடர்ந்து ராஜமோகனின் ‘ருக்குமணி வண்டி வருது’, பர்னேஷின் ‘ஒத்தைக்கு ஒத்த’, அஜய் ஞானமுத்துவின் ‘இமைக்கா நொடிகள்’ மற்றும் டார்லிங் பட இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் அதிரடி த்ரில்லர் படம் என பல படங்களில் நடித்து வருகிறார்.  

இதனை தொடர்ந்து கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த 'இவன் தந்திரன்' படத்தின் இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஜனவரி 19ல் துவங்கவிருப்பதாகவும் தற்பொழுது படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வந்திருந்தது. மேலும் இப்படத்தினை MKRP புரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து இயக்குனர் ஆர்.கண்ணனனுக்கு சொந்தமான ‘மசாலா பிக்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கவுள்ளார். இந்த படத்தில் ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ்  ரதன் இசையமைக்கவிருப்பது குறிப்பிட்ட தக்கது.

இந்நிலையில் அதர்வாவின் மற்றோரு புதிய படத்தின் தகவல் வந்துள்ளது. இந்த படத்தினை 'இந்தியா பாகிஸ்தான்’ புகழ் என்.ஆனந் இயக்கவிருப்பதாகவும் இப்படத்தின் முக்கிய வேடத்திற்காக முன்னணி நடிகர்களுடன் தற்பொழுது பேச்சிவார்த்தை நடைபெற்று வருதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் இப்படத்தினை 'ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த நிறுவனம் விஜய்யின் 'பைரவா' படத்தினை தயாரித்திருப்பது குறிப்பிட்ட தக்கது. இன்னும் சில நாட்களில் படத்தின் டைட்டில், நாயகி, இதர நடிகர் - நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் பட்டியில் வெளியிட உள்ளனர்.          

இந்தியா பாகிஸ்தான் இயக்குனருடன் இணையும் அதர்வா