ads

தினேஷ் படத்தின் மூலம் வில்லியாக எண்ட்ரி கொடுக்கும் தேவயானி

நடிகை தேவயானி வில்லியாக நடித்துள்ள களவாணி மாப்பிள்ளை படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

நடிகை தேவயானி வில்லியாக நடித்துள்ள களவாணி மாப்பிள்ளை படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கி வந்த தேவயானி, 1995இல் 'தொட்டா சிணுங்கி' படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் இது வரை தமிழ் சினிமாவில் 55 படங்களில் நடித்துள்ளார். தன்னுடைய மார்க்கெட் இழந்த பிறகும் அவ்வப்போது ஓரிரு படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது விவேக்குடன் இணைந்து 'எழுமின்' படத்திலும், தினேஷின் 'களவாணி மாப்பிள்ளை' படத்திலும் நடித்துள்ளார்.

இதில் இயக்குனர் காந்தி மணிவாசகம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'களவாணி மாப்பிள்ளை' படத்தில் வில்லி தோற்றத்தில் நடித்துள்ளார். காதல் கலந்த காமெடி படமான இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் நாயகனாகவும் அதிதிமேனன் நாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து ஆனந்த் ராஜ், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், தேவயானி, ரேணுகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தற்போது இந்த படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. விரைவில் இந்த படத்தின் வெளியீடு தேதியினை படக்குழு அறிவிக்க உள்ளனர். அட்டகத்தி தினேஷ் நடிப்பில் 'அண்ணனுக்கு ஜே' தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு பிறகு அடுத்ததாக 'களவாணி மாப்பிள்ளை' படம் விரைவில் வெளியாகவுள்ளது.

தினேஷ் படத்தின் மூலம் வில்லியாக எண்ட்ரி கொடுக்கும் தேவயானி