ads

'பலூன்' படத்தின் வெளியிடு தேதி அறிவிப்பு

'பலூன்' படத்தின் வெளியிடு தேதி அறிவிப்பு

'பலூன்' படத்தின் வெளியிடு தேதி அறிவிப்பு

நடிகர் ஜெய் நடிப்பில் அடுத்து திரைத்துறையில் களமிறங்கும் படம் 'பலூன்'. இந்த படத்தை புதுமுக இயக்குனர் சினிஸ் இயக்குகிறார். இந்த படத்தை 70எம்எம் என்டேர்டைன்மெண்ட் மற்றும் பார்மர்ஸ் மாஸ்டர் பிளேன் ப்ரொடக்சன் தயாரிப்பின் கீழ் திலீப் சுப்பராயன், அருண் பாலாஜி, நந்தகுமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தில் ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் உள்ளிட்டோர் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படம் நவம்பர் 27-இல் வெளிவரும் என்று தகவல்கள் வெளியான நிலையில் தற்போது டிசம்பர் 29-இல் வெளிவரும் என படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த படத்தில் 'எங்கேயும் எப்போதும்' படத்தில் ஜோடி சேர்ந்த ஜெய், அஞ்சலி கிட்டத்தட்ட 6 வருடங்களுக்கு பின்னர் இணைந்துள்ளனர். எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் இருவரும் காதலிப்பதாக தகவல்கள் வெளிவந்தது. ஆனால் அஞ்சலி இதை மறுத்துள்ளார். இதை அடுத்து தற்போது வெளிவர இருக்கும் 'பலூன்' படத்தில் ஜோடி சேர்ந்துள்ளனர்.

'பலூன்' படத்தின் வெளியிடு தேதி அறிவிப்பு