ads

நீலாம்பரி ஐஸ்வர்யா இஸ் பேக் - சண்டை போடும் டேனி மகத்

போரடிக்க ஆரம்பித்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது மீண்டும் கலவரமாக, ரணகளத்துடன் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

போரடிக்க ஆரம்பித்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது மீண்டும் கலவரமாக, ரணகளத்துடன் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 58வது நாள் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. கடந்த வாரம் சென்றாயன், பொன்னம்பலம், ஜனனி ஆகியோரில் சித்தப்பு பொன்னம்பலத்தை கமல் ஹாசன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று வெளியே அழைத்து வந்தார். இதன் பிறகு நேற்று நடந்த நிகழ்ச்சியில் மீண்டும் ஏவிக்சன் அரங்கேறியது. இதில் மீண்டும் ஜனனி, டேனி, சென்றாயன், வைஷ்ணவி ஆகியோரை இந்த வார ஏவிக்சன் நாமினேஷனுக்கு போட்டியாளர்கள் தேர்வு செய்துள்ளனர்.

இது தவிர வீட்டின் தலைவி ஐஸ்வர்யா ரித்விகாவை நேரடியாக நாமினேட் செய்துள்ளார். தற்போது பிக்பாஸில் வைஷ்ணவி மற்றும் டேனியின் வாக்குவாத போரும், மகத் மற்றும் யாஷிகா உறவு குறித்த வாதங்களும் ஹைலைட்டாக சென்று கொண்டிருக்கிறது. ஆனால் ராணி மகாராணி டாஸ்க்கிற்கு பிறகு பிக்பாஸ் ரசிகர்களுக்கு போராடிக்க ஆரம்பித்து விட்டது. கலவரங்கள், வாக்கு வாதங்களால் ரணகளமாக இருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது எங்கு பார்த்தாலும் பட்டி மன்றமாக காட்சி அளிக்கிறது.

இந்நிலையில் தற்போது பிக்பாஸின் புது ப்ரோமோ விடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதனை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த ப்ரோமோவில் புது டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஐஸ்வர்யா மீண்டும் நீலாம்பரியாக மாறியுள்ளார். டாஸ்க்கில் வெற்றி பெற டேனியும், மகத்தும் சண்டை போட்டு கொள்கின்றனர். இதனால் போரடித்து வெறுத்துப்போன பிக்பாஸ் நிகழ்ச்சி மீண்டும் ரணகளமாக சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

நீலாம்பரி ஐஸ்வர்யா இஸ் பேக் - சண்டை போடும் டேனி மகத்