ads

சுந்தர் சி சிம்பு கூட்டணியில் இணைந்துள்ள பிக்பாஸ் மகத்

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் சிம்புவுடன் முதன் முறையாக இணைந்து பிக் பாஸ் மகத் நடிக்க உள்ளார்.

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் சிம்புவுடன் முதன் முறையாக இணைந்து பிக் பாஸ் மகத் நடிக்க உள்ளார்.

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் தற்போது 'அட்டரண்ட்டிகி தேரடி' தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக் மும்முரமாக உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் விஷால் மற்றும் தமன்னா ஆகியோரை வைத்து புதுப்படம் ஒன்றை உருவாக்க உள்ளார். இதனை தொடர்ந்து இவருடைய கனவு படமான 'சங்கமித்ரா' படத்தையும் துவங்கவுள்ளார். இதில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ரீமேக் படத்தில் சிம்பு இரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்க உள்ளார். தற்போது காமெடி நடிகராக யோகி பாபு சிம்பு படத்தில் முதன் முறையாக இணைந்து நடிப்பதாக அறிவிப்பு வெளியான நிலையில் பிக்பாஸ் சீசன் 2வின் கோவக்கார போட்டியாளரான மகத்தும் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தின் மூலம் மகத் தனது நெருங்கிய நண்பனான சிம்புவுடன் இணைந்து நடிக்க உள்ளார்.

தற்போது மகத், சிம்பு, சுந்தர் சி படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் சீசன் 2 மூலம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டேனியல், ஐஸ்வர்யா, ஜனனி ஐயர், ரித்விகா ஆகியோருக்கு பட வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றது. இந்த வரிசையில் தற்போது மகத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சுந்தர் சி படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சிம்புவின் அடுத்த படத்தில் பிக்பாஸ் போட்டியாளர் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

சுந்தர் சி சிம்பு கூட்டணியில் இணைந்துள்ள பிக்பாஸ் மகத்