ads
மகத்தின் பிரிவை தாங்க முடியாமல் கண்ணீர் வடிக்கும் யாஷிகா
மீனா ஸ்ரீ (Author) Published Date : Aug 27, 2018 15:09 ISTபொழுதுபோக்கு
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 71வது நாள் நேற்று ஏவிக்சனுடன் நிறைவடைந்தது. நேற்று ஏவிக்சனில் மகத், அவருடைய கோபத்தால் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். கடந்த ஒரு வாரமாகவே தன்னுடைய கட்டுபடுத்த முடியாத கோபத்தால் மும்தாஜ், டேனியல், பாலாஜி ஆகியோரிடம் சண்டை போட்டு வந்ததால் ரசிகர்களிடம் கெட்ட பெயரை வாங்கி கொண்டார்.
இதனால் நாமினேஷன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மகத், மும்தாஜ், பாலாஜி, சென்றாயன் ஆகியோரில் மகத் நேரிடையாக வெளியேற்றப்பட்டார். இவரின் பிரிவை தாங்க முடியாமல் ஐஸ்வர்யா, யாஷிகா மற்றும் பாலாஜி ஆகியோர் கண்ணீர் வடித்தனர். மகத்துடன் எலியும் பூனையுமாக சண்டை போட்டு வந்த டேனியும், மும்தாஜும் சண்டையை மறந்து, அவரை நல்ல படியாக வழியனுப்பி வைத்தனர்.
இதன் பிறகு மகத்தை காதலித்து வந்த யாஷிகா, அவரை மறக்க முடியாமல் தோழி ஐஸ்வர்யாவிடம் கண்ணீர் விட்டு அழுதபடியே உள்ளார். டேய் மகத் ஏண்டா என்ன விட்டு போன, கண் முன்னாடி வந்து வந்து போறியே என அழுது புலம்புகிறார். இன்னும் 30 நாட்கள் மீதமுள்ளது. தற்போது பிக்பாஸின் புதிய தலைவராக முதன் முறையாக சென்றாயன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தான் பொறுப்பேற்ற வுடன் போட்டியாளர்களிடம் கிராமத்தின் பெருமையை எடுத்துரைக்க ஒரு பஞ்சாயத்தை தயார் செய்தார். ஆனால் அது இறுதியில் காமெடியாக முடிந்து விட்டது. இது தவிர நடந்த அனைத்து பிரச்னைக்குமே காரணம் யாஷிகா தான் என போட்டியாளர்கள் ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். இதனால் வரும் நாமினேஷனில் யாஷிகாவை எல்லாருமே நாமினேட் செய்ய உள்ளனர்.