Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

நடிகர் தனுஷின் 37வது படத்தின் முக்கிய தகவல்

dhanush directional next movie updates

இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் இரண்டாவது மகனான நடிகர் தனுஷ், 2002-ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து காதல் கொண்டேன், திருடா திருடி, சுள்ளான், புதுப்பேட்டை, பொல்லாதவன், யாரடி நீ மோகினி உள்ளிட்ட 35 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் 2011-ஆம் ஆண்டு வெளியான 'ஆடுகளம்' படத்திற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. இவருடைய தயாரிப்பில் 3, எதிர்நீச்சல், காக்கா முட்டை, வேலையில்லா பட்டதாரி, காக்கி சட்டை, நானும் ரவுடி தான் போன்ற படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இவர் தற்போது 'வாட சென்னை', 'என்னை நோக்கி பாயும் தோட்டா', 'மாரி 2' போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இதனை அடுத்து இவருடைய இயக்கத்தில் முதல் படமான 'பா பாண்டி' திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ், இவருடைய இயக்கத்தில் புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. இது குறித்த அறிவிப்பை தனுஷ் நேற்று தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில் "என்னுடைய அடுத்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இயக்க உள்ளேன். நான் இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறேன். தனுஷ் 37 படத்தின் அடுத்த கட்ட தகவல் 2018 இல் வெளியாகும்." என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷின் 37வது படத்தின் முக்கிய தகவல்