ads
தீபாவளி கிறிஸ்துமஸ் என அடுத்தடுத்து ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் தனுஷ்
விக்னேஷ் (Author) Published Date : Sep 01, 2018 11:31 ISTபொழுதுபோக்கு
தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பன்முக திறமைகளை கொண்டுள்ள தனுஷ், வேலையில்லா பட்டதாரி 2 படத்திற்கு பிறகு மாரி 2, எனை நோக்கி பாயும் தோட்டா, வட சென்னை போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படமும், இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'வட சென்னை' போன்ற படங்கள் நீண்ட வருடங்களாக உருவாகி வருகிறது.
தற்போது இந்த படத்தின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த படங்களின் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இயக்குனர் கவுதம் மேனனின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் வரும் நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி விருந்தாக வெளியாகவுள்ளது.
இதன் பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் மூன்று பாகங்களாக உருவாகி வந்த 'வட சென்னை' படம் அக்டொபர் 17இல் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்நிலையில் இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகி வந்த 'மாரி 2' படத்தின் வெளியீடு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாரி படத்தின் இரண்டாம் பாகமான இந்த படம் டிசம்பர் 21இல் கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியாகவுள்ளது. இந்த மூன்று படங்களுக்குமே ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.