ads

தனுஷின் வட சென்னை இசை வெளியீடு தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

இயக்குனர் வெற்றிமாறனின் வட சென்னை படத்தின் இசை வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் வெற்றிமாறனின் வட சென்னை படத்தின் இசை வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான தனுஷ் நடிப்பில் அடுத்ததாக மாரி 2, வட சென்னை, எனை நோக்கி பாயும் தோட்டா போன்ற படங்கள் வெளியாகவுள்ளது. இதில் பொல்லாதாவன், ஆடுகளம் போன்ற படங்களுக்கு பிறகு மீண்டும் தனுசுடன் மூன்றாவது முறையாக இணைந்து இயக்குனர் வெற்றி மாறன் 'வட சென்னை' படத்தை நீண்ட வருடங்களாக உருவாக்கி வருகிறார்.

மூன்று பாகங்களை கொண்டதாக உருவாகி வரும் இந்த படத்தின் முதல் பாகம் வரும் அக்டொபர் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது. முன்னதாக இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் போன்றவை வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இதன் பிறகு இந்த படத்தின் பாடல்களை வெளியிட உள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதன்படி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் இசை வரும் செப்டம்பர் 23இல் வெளியாகவுள்ளது. இதனால் இந்த படத்தின் இசைக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். தனுஷ் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ், பத்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா இயக்குனர் அமீர், கிஷோர், கருணாஸ், ராதா ரவி, சுப்ரமணிய சிவா உள்ளீட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தனுஷின் வட சென்னை இசை வெளியீடு தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு