ads

மெட்ரோ இயக்குனரின் ஆக்சிஜன் பர்ஸ்ட் லுக்

metro director ananda krishnan oxygen movie first look poster

metro director ananda krishnan oxygen movie first look poster

இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான படம் 'மெட்ரோ'. இந்த படத்தின் கதையம்சமும் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணனின் இயக்கமும் இந்த படம் ரசிகர்களுக்கு புது வித அனுபவத்தை தந்தது. குற்றப்பிரிவு சார்ந்த இந்த படம் வெகுவாக திரையுலக வட்டாரங்களை திரும்பி பார்க்க வைத்து மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் சிரிஷ், சென்றாயன், நிஷாந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பாபி சிம்ஹா நடித்திருந்தார். மேலும் இந்த படத்தை தெலுங்கில் டப் செய்து அடுத்த வருடம் 2017-இல் வெளியிடப்பட்டது. கன்னடத்தில் இந்த படத்தை 'சிலிகான் சிட்டி' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு 2017, ஜூன் மாதம் வெளிவந்தது. 

இதனை தொடர்ந்து இயக்குனர் அனந்த கிருஷ்ணன் தற்போது 'ஆக்சிஜன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் அசோக் செல்வன் நடிக்கிறார். இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் மற்றும் ஷ்ரத்தா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் என் ராமசாமி மற்றும் பத்ரி கஸ்தூரி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். என் எஸ் உதயகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். மேலும் இந்த படத்திற்கு ஜோகன் இசையமைக்கிறார். இந்நிலையில் நேற்று புத்தாண்டை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

metro director ananda krishnan oxygen movie first look postermetro director ananda krishnan oxygen movie first look poster

மெட்ரோ இயக்குனரின் ஆக்சிஜன் பர்ஸ்ட் லுக்