ads
ஹன்சிகாவின் 50வது படத்தை இயக்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன் - இயக்குனர் யுஆர் ஜமீல்
மீனா ஸ்ரீ (Author) Published Date : Aug 13, 2018 12:59 ISTபொழுதுபோக்கு
தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவின் முன்னணி நடிகையான ஹன்சிகா, பிரபு தேவாவின் 'குலேபகாவலி' படத்திற்கு பிறகு விக்ரம் பிரபுவுடன் இணைந்து 'துப்பாக்கி முனை' படத்திலும், நடிகர் அதர்வாவுடன் இணைந்து '100' என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கு பிறகு புதுமுக இயக்குனர் யுஆர் ஜெமீல் இயக்கத்தில் புதுப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
இவருடைய 50வது படமான இந்த படத்தின் டைட்டில் லுக்கை நடிகர் மற்றும் தயாரிப்பாளரான தனுஷ் கடந்த 11ஆம் தேதி வெளியிட்டுள்ளார். இதன்படி இந்த படத்திற்கு 'மஹா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கிப்ரான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தினை எட்செட்ரா என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வி மதியழகன் தயாரித்து வருகிறார்.
இந்த படம் குறித்து இயக்குனர் கூறுகையில் "இந்த படம் நாயகிக்கு முக்கியத்துவம் விதமாக உருவாக்க உள்ளோம். அதற்கேற்றவாறு இந்த கதாபாத்திரத்திற்கு தகுந்த துணிச்சல், கருணை, அழகு, வீரம் போன்ற அனைத்து குணங்களும் ஹன்சிகாவிற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளது. இந்த படத்தின் டைட்டில் ஆகஸ்ட் 11இல் வெளியிடப்பட்டுள்ளது. ஹன்சிகாவின் 50வது படத்தை நான் இயக்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த படத்திற்கு கிப்ரான் இசையமைக்க மதியழகன் தயாரிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பை செப்டம்பரில் துவங்க உள்ளோம். இந்த படம் 2019இல் வெளிவரும். இந்த படத்தின் மூலம் ஹன்சிகா என்ற இளவரசியை காண்பிக்க உள்ளோம்." இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ள இவர் முன்னதாக ரோமியோ ஜூலியட், போகன் படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இயக்குனர் ஜெமீல் இணை இயக்குனராக பணியாற்றியுள்ள இந்த இரண்டு படங்களிலும் ஹன்சிகா நாயகியாக நடித்துள்ளார். இந்த படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக இவர்களது கூட்டணி இணைந்துள்ளது.