Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

விக்னேஷ் சிவன் ட்விட்டரில் வெளியிட்ட தகவல்

aniruth vignesh shivan joins to team up again

தமிழ் திரையுலகில் இயக்குநர், நடிகர், மற்றும் திரைப்படப் பாடலாசிரியரான விக்னேஷ் சிவன் 'போடா போடி' படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் 'நானும் ரவ்டி தான்' என்ற படத்தினை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தார். இந்த வெற்றி படத்தினை தொடர்ந்து சூர்யாவின் 35வது படமான 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தினை இயக்கியிருந்தார். பொங்கல் விருந்தாக வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வெற்றியை பெற்று வருகிறது.  

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவனின் அடுத்த படம் குறித்த தகவல் கடந்த நாட்களில் வெளிவந்தது. இதில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கவிருப்பதாகவும் தகவலில் வெளியானது. தற்பொழுது விக்னேஷ் சிவம் அமெரிக்கா நகரத்தில் விடுமுறையை கழித்து வருகிறார். இவருடன் இணைந்து இசையமைப்பாளர் அனிருத்தும் சென்றுள்ளார். இந்நிலையில் இருவரும் இணைந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டதோடு சில தகவலையும் பதிவு செய்துள்ளார். அதில் 'என் பயணத்தில் தூணாக இருந்த அனிருத்தோடு மீண்டும் இணைகிறேன். ஒரு புது படத்திற்கான தேடல் நடைபெற்று இருக்கிறது. விரைவில் படத்தின் தகவல் வெளியாகும்' என பதிவின் மூலம் வெளியிட்டுள்ளார். மேலும் இப்படத்தில் நாயகனாக சிவகார்த்திகேயன் நடிப்பதற்கு வாய்ப்புகள் இருக்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்படுகிறது.        

விக்னேஷ் சிவன் ட்விட்டரில் வெளியிட்ட தகவல்