சுசீந்திரனின் சாம்பியன் படத்தில் டப்மாஸ் மிர்னாலினி

       பதிவு : Jun 01, 2018 15:04 IST    
சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு பிறகு டப்மாஸ் மிர்னாலினி இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் சாம்பியன் படத்தில் நாயகியாக இணைந்துள்ளார். சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு பிறகு டப்மாஸ் மிர்னாலினி இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் சாம்பியன் படத்தில் நாயகியாக இணைந்துள்ளார்.

இயக்குனர் சுசீந்திரன், தனது முதல் படமான வெண்ணிலா கபடி குழு படத்தின் வெற்றிக்கு பிறகு நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, ஜீவா போன்ற பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இயக்குனராக இருந்த இவர் தற்போது நடிகராகவும் 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார். இவருடைய இயக்கத்தில் நெஞ்சில் துணிவிருந்தால் படத்திற்கு பிறகு ஏஞ்சலினா, ஜீனியஸ், சாம்பியன் போன்ற படங்கள் உருவாகி வருகிறது.

இதில் புதுமுகங்களை கொண்டு சாம்பியன் படம் உருவாகி வருகிறது. இந்த படம் கபடி, கிரிக்கெட் போன்றவற்றிற்கு பிறகு கால்பந்தை மையமாக கொண்டு உருவாகி வருகிறது. புதுமுகமான் ரோஷன் நாயகனாக நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் நாயகியாக டப்மாஸ் பிரபலமான மிர்னாலினி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படம் இவர் நாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகும் முதல் படம்.

 

இது தவிர டப்மாசில் பிரபலமானதற்கு பிறகு படப்பிடிப்பை தவிர்த்து வந்த மிர்னாலினி, சமீபத்தில் விஜய் சேதுபதி லேடி கெட்டப்பில் நடித்து வரும் 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் சிறு கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு மிர்னாலினி நாயகியாக சாம்பியன் படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்திற்கு அரோல் கரோலி இசையமைத்து வருகிறார். பிரபல கால்பந்து வீரர் விஜயன் பயிற்சியாளராக பணிபுரிந்து வரும் இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் டிசம்பரில் வெளியாக உள்ளது.


சுசீந்திரனின் சாம்பியன் படத்தில் டப்மாஸ் மிர்னாலினி


செய்தியாளர் பற்றி

விக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார். ... மேலும் படிக்க

Vignesh writer and reporter

விக்னேஷ்செய்தியாளர்