ads

இறுதி கட்டத்தை எட்டிய அருண் விஜயின் - தடம்

thadam movie stills

thadam movie stills

2015-ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த 'என்னை அறிந்தால்' படத்தின் ரவுடி கெட்டப்பில் நடித்திருந்த அருண் விஜய்யின் நடிப்பு பேசப்படும் அளவிற்கு வெற்றியை பெற்றது. இந்த படத்தின் மூலம் அருண் விஜய்யின் மார்க்கெட் அதிகரித்தது. மேலும் தெலுங்கு, ஹிந்தி, கன்னட போன்ற திரையுலகில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தது. 'இதற்கு அடுத்தபடியாக 'குற்றம் 23' படத்தில் வெற்றியை பெற்றதினை தொடர்ந்து சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தடையறத் தாக்க, மீகாமன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் 'தடம்' என்ற அதிரடி படத்தில் தற்பொழுது அருண் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் இரண்டாவது முறையாக இணைந்துள்ள இவர்களது கூட்டணி உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கி இருக்கிறதாம். இந்த படத்தின் நாயகியாக தான்யா ஹோப் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து ஸ்மிருதி வெங்கட், வித்யா பிரதீப் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி நிலையை எட்டியிருப்பதாக அருண் விஜய் அவரது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் புதியதாக ஒரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.         

இறுதி கட்டத்தை எட்டிய அருண் விஜயின் - தடம்