கெளதம் மேனனுடன் மீண்டும் இணையும் பிரபல நடிகை

       பதிவு : Nov 01, 2017 12:34 IST    
கெளதம் மேனனுடன் மீண்டும் இணையும் பிரபல நடிகை

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகைகளில் ஒருவரான அனுஷ்கா, அருந்ததி, ருத்ரம்மா தேவி, பாகுபலி போன்ற பிரமாண்ட படங்களில் நடித்து மெகா ஹிட் வரவேற்பினை தொடர்ந்து, ஜி அசோக் இயக்கத்தில் உருவாக்கி வரும் 'பாக்மதி' படத்தில் நடித்து வருகிறார்.   இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. 

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாக்கி வரும் இப்படத்தினை கதாநாயகியை மையப்படுத்தும் வகையில் இருப்பதாகவும், பஸ்ட் லுக் போஸ்டர் அனுஷ்கா பிறந்த நாள் முன்னிட்டு நவம்பர் 7ம் தேதி வெளியிடுவதாகவும் கூறுகின்றனர்.      

 

இந்நிலையில் இப்படத்தினை தொடர்ந்து அனுஷ்கா செட்டி, தமிழ் திரையுலகில் பேசப்படும் இயக்குனரங்களின் ஒருவரான கெளதம் மேனன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. முதல் முறையாக 'என்னை அறிந்தால்' படத்தில் லீடு ரோலில் நடித்து இணைந்ததினை தொடர்ந்து மீண்டும் கெளதம் மேனனுடன் இணையவுள்ளார்.     


கெளதம் மேனனுடன் மீண்டும் இணையும் பிரபல நடிகை


செய்தியாளர் பற்றி

விஷுவல் மீடியா துறையை சேர்ந்த மீனா ஸ்ரீ எழுத்து மற்றும் கலை துறையில் ஆர்வமாக உள்ளார். மீனா, உலகம் முழுவதும் புதிய விஷயங்களைப் பற்றி கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். நமது கற்றலுக்கு தேவையான விஷயங்கள் அனைத்தும் நம்மை சுற்றியுள்ள உலகத்திலிருந்தே கிடைக்கும் என நினைப்பவர். மேலும் இவர் சினிமா மற்றும் திரைப்பட தொடர்பான செய்திகளை நேசித்து வருகிறார். ... மேலும் படிக்க

meena shree

மீனா ஸ்ரீஎழுத்தாளர்