ads

பழங்குடி மக்களுக்காக போராடிய பிர்சா முண்டாவின் சரித்திரத்தை இயக்கும் கோபி நயினார்

இயக்குனர் கோபி நயினார் பழங்குடி போராட்ட வீரர் பிர்சா முண்டா வாழ்க்கை கதையை உருவாக்க முடிவு செய்துள்ளார்.

இயக்குனர் கோபி நயினார் பழங்குடி போராட்ட வீரர் பிர்சா முண்டா வாழ்க்கை கதையை உருவாக்க முடிவு செய்துள்ளார்.

'அறம்' படத்தின் மூலம் இயக்குனராக என்ட்ரி கொடுத்த இயக்குனர் கோபி நயினார், தன்னுடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இவருடைய அடுத்த படத்தில் நடிகர் ஜெய் நாயகனாகவும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாகவும் நடித்து வருகின்றனர். இந்த படமும் சமூக கருத்துக்களை மையமாக வைத்து உருவாகி வருகிறது. தற்போது இவருடைய அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பழங்குடி மக்களுக்காக போராடிய பிர்சா முண்டாவின் சரித்திரத்தை இயக்கும் கோபி நயினார்

இவருடைய அடுத்த படம் பழங்குடி மக்களுக்காக போராடி உயிர்நீத்த போராட்ட வீரர் 'பிர்சா முண்டா' அவர்களின் வாழ்க்கை கதையை தழுவியதாக உருவாக உள்ளது.பிர்சா முண்டா அவர்கள், ஆங்கிலேய அரசிடமும், நில உரிமைதாரர்களிடமும் அடிமை பட்டுக்கிடந்த பழங்குடி மக்களுக்காக போராடியவர். இவருடைய நினைவாக ராஞ்சி, பெருல்லா, சின்த்ரி போன்ற இடங்களில் பல்கலை கழகங்கள், தொழில்நுட்ப மையங்கள் போன்றவை இயங்கி வருகின்றது. இவருடைய சொந்த ஊரான ராஞ்சியில் உள்ள விமான நிலையத்திற்கு இவருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பழங்குடி மக்களுக்காக போராடிய பிர்சா முண்டாவின் சரித்திரத்தை இயக்கும் கோபி நயினார்

பழங்குடி மக்களுக்காக போராடிய இவரை 1990இல் ஆங்கிலேய அரசு கைது செய்து ராஞ்சி சிறையில் அடைத்தது. பிறகு தன்னுடைய 25வது வயதில் சிறையிலேயே மரணமடைந்தவர். இவருடைய வாழ்க்கை கதையை படமாக்கி மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் இயக்குனர் கோபி நயினார் களமிறங்கியுள்ளார். இந்த படம் 1880 மற்றும் 1900 வரை உள்ள காலகட்டத்தை சார்ந்த படமாக உருவாக உள்ளது. விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பினை படக்குழு வெளியிடவுள்ளது.  

பழங்குடி மக்களுக்காக போராடிய பிர்சா முண்டாவின் சரித்திரத்தை இயக்கும் கோபி நயினார்