ads

ஹிப் ஹாப் ஆதி வெளியிடும் டி ராஜேந்தரின் ஏந்திரு அஞ்சலி ஏந்திரு பாடல்

கபிலன் வைரமுத்து கைவண்ணத்தில் உருவான ஏந்திரு அஞ்சலி ஏந்திரு பாடல் டீசரை ஹிப் ஹாப் ஆதி வெளியிட உள்ளார்.

கபிலன் வைரமுத்து கைவண்ணத்தில் உருவான ஏந்திரு அஞ்சலி ஏந்திரு பாடல் டீசரை ஹிப் ஹாப் ஆதி வெளியிட உள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியரான கபிலன் வைரமுத்து கடந்த ஆண்டில் பணமதிப்பிழப்பிற்கு எதிராக நடிகர் சிலம்பரசனை வைத்து பாடல் ஒன்றை வெளியிட்டார். இதன் பிறகு தற்போது ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான 'குடி' மகன்களை உருவாக்கி வரும் மது பழக்கத்திற்கு எதிராக புதிய பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த பாடலுக்கு பணமதிப்பிழப்பு பாடலுக்கு இசையமைத்த பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார்.

முன்னதாக நடிகர் சிம்பு பாடிய நிலையில் தற்போது இந்த பாடலை அவரது தந்தை டி ராஜேந்தர் பாடியுள்ளார். இந்த பாடலின் டைட்டில் மற்றும் வெளியீடு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி இந்த பாடலுக்கு 'ஏந்திரு அஞ்சலி ஏந்திரு' என்று தலைப்பு  வைக்கப்பட்டுள்ளது. இந்த பாடலின் டீசரை நடிகர் மற்றும் இசையமைப்பாளரான ஹிப் ஹாப் ஆதி வரும் செப்டம்பர் 3ஆம் தேதியில் மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளார். 

ஹிப் ஹாப் ஆதி வெளியிடும் டி ராஜேந்தரின் ஏந்திரு அஞ்சலி ஏந்திரு பாடல்