Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

இரும்புத்திரை படத்தின் தெலுங்கு டீசர் ரிலீஸ்

abhimanyudu teaser release today 5pm

நடிகர் சங்கத்தின் பொதுச் செயலளர் மற்றும் நடிகருமான விஷால் 'இரும்புத்திரை', 'சண்டகோழி 2' போன்ற படங்களில் நடித்து வருகிறார். விஷாலுக்கு சொந்தமான VVF தயாரிப்பு நிறுவனத்தின் மூலம்  'இரும்புத்திரை' படத்தினை தயாரித்து வருகிறார். இந்த படத்தினை பிஎஸ்.மித்ரன் இயக்குகிறார். சமந்தா நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் டெல்லி கணேஷ், ரோபோ சங்கர், வின்சென்ட் அசோகன் போன்றவர்கள் நடிக்கின்றனர். மேலும் முக்கிய வேடமான வில்லன் கதாபாத்திரத்தில் 'ஆக்சன் கிங்' அர்ஜுன் இணைந்துள்ளார்.    

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தினை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியிட உள்ளனர். 'அபிமன்யுடு' என்ற தலைப்பில் தெலுங்கில் வெளிவர உள்ள இப்படத்தின் தெலுங்கு டீசர் இன்று மாலை 5மணிக்கு வெளியிட இருப்பதாக தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தில்  ஜியார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் ஈடுபட ரூபன் எடிட்டிங் பணியை மேற்கொண்டுள்ளார். மேலும் படத்தின் போஸ்டர், டீசர் போன்றவை வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றதோடு படத்தின் எதிர்பார்ப்புகளையும் அதிகரித்துள்ளது.  இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டை மலேசியாவில் நடைபெற உள்ள நட்சத்திர விழாவில் வெளியிட உள்ளனர். மேலும் படத்தின் 'யார் இவன்' என்ற சிங்கிள் டிராக்கை படக்குழு நேற்று (4.1.18) வெளியிட்டுள்ளது. இந்த சிங்கிள் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.   

இரும்புத்திரை படத்தின் தெலுங்கு டீசர் ரிலீஸ்