ads

இயேசு குறித்த கருத்தால் சிக்கிய இசைஞானி இளையராஜா

பிரபல பாடகர் மற்றும் இசையமைப்பாளரான இளையராஜா தற்போது இயேசு உயிர்த்தெழுவது குறித்து பேசியதால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

பிரபல பாடகர் மற்றும் இசையமைப்பாளரான இளையராஜா தற்போது இயேசு உயிர்த்தெழுவது குறித்து பேசியதால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

பிரபல பாடகர் மற்றும் இசையமைப்பாளரான இளையராஜா தற்போது இயேசு உயிர்த்தெழுவது குறித்து பேசியதால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவர் கூகுள் நிறுவனத்தின் தலைமையகத்திற்கு சமீபத்தில் வருகை புரிந்துள்ளார். இதில் பணிபுரியும் ஊழியர்கள் மத்தியில் பேசிய அவர் "ரமண மகரிஷியை போன்று உலகில் தோன்றிய ஞானிகளில் வேறு எவரும் கிடையாது.

இயேசு உயிர்த்தெழுந்து வந்ததாக சொல்வார்கள். அவர் உயிர்த்தெழுந்து பற்றி நிரூபணமாகவில்லை என்று சொல்லப்படுகிறது. உயிர்தெழுந்தல் என்பது நிகழ்ந்தது ஒருவருக்கு மட்டும் தான். தன்னுடைய 16 வயதில் ரமண மகரிஷிக்கு தான் உயிர்த்தெழுதல் நிகழ்ந்துள்ளது." என்று அவர் தெரிவித்துள்ளார். இசைஞானி இளையராஜாவின் இந்த கருத்து தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. இது கிறிஸ்தவர்களின் உணர்வுகளையும், நம்பிக்கையும் இழிவு படுத்துவதாக சிறுபான்மை மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.

மேலும் இளையராஜாவின் இந்த பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று சிறுபான்மை மக்கள் நல கட்சியை சேர்ந்த 35 நபர்கள் இளையராஜாவின் வீட்டை முற்றுகையிட முயன்றுள்ளனர். இதனால் இவர்களை காவல் துறை அதிகாரிகள் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதன் பிறகு அவர்களை விடுதலை செய்துள்ளனர். இளையராஜாவின் சர்ச்சை பேச்சு காரணமாக அவரது வீட்டின் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இயேசு குறித்த கருத்தால் சிக்கிய இசைஞானி இளையராஜா