Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

வெளியானது ஜீவாவின் கொரில்லா பர்ஸ்ட் லுக் போஸ்டர்

விஜய் பிறந்த நாளான இன்று ஜீவாவின் கொரில்லா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் மற்றும் பிரபல தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரியின் மகனான ஜீவா நடிப்பில் தற்போது இந்தியாவின் முதல் சிம்பான்சி படமான 'கொரில்லா' படம் உருவாகி வருகிறது. தாய்லாந்தில் படப்பிடிப்பை முடித்து இந்தியா திரும்பிய படக்குழு தற்போது படத்தின் வெளியீட்டு பணிகளை மும்முரமாக செய்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்த நாளில் வெளிவருவதாக அறிவித்தது. இதன்படி இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்த நாளான இன்று காலை 9 மணியளவில் படக்குழு வெளியிட்டுள்ளது.

அட்வன்ச்சர் கலந்த காமெடி படமான இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடித்துள்ளார். அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தெலுங்கில் பிரபலமான இவருக்கு தமிழிலும் ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. மேலும் இந்த படத்தில் விவேக் பிரசன்னா, யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், சதிஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் டான் சாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 

வெளியானது ஜீவாவின் கொரில்லா பர்ஸ்ட் லுக் போஸ்டர்