ads
தீபாவளிக்கு தள்ளிப்போன ஜோதிகாவின் காற்றின் மொழி
மீனா ஸ்ரீ (Author) Published Date : Oct 05, 2018 03:10 ISTபொழுதுபோக்கு
இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் '60 வயது மாநிறம்' படத்திற்கு பிறகு அடுத்ததாக வெளிவரவுள்ள படம் 'காற்றின் மொழி'. இந்தியில் வெளியான 'தும்ஹரி சுலு' படத்தின் தமிழ் ரீமேக்கான இந்த படத்தில் ஜோதிகா ரேடியோ ஜாக்கியாகவும், அவருடைய கணவராக நடிகர் விதார்த்தும் நடித்துள்ளனர்.
இந்த படம் வரும் அக்டொபர் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது தமிழகம் முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதாலும் அக்டொபர் 18ஆம் தேதியில் வட சென்னை, சண்டக்கோழி 2, எழுமின், அண்டாவ காணோம், திருப்பதி சாமி குடும்பம் போன்ற 5 படங்கள் வெளியாக உள்ளதாலும் தியேட்டர் கிடைக்காத நிலையில் உள்ளது.
இதனால் 'காற்றின் மொழி' படத்தினை வரும் நவம்பர் மாதத்தில் தீபாவளியில் வெளியிட முடிவு செய்துள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் வெளியீட்டிற்கான புதிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசைப்புயலின் மருமகனான ஏஹச் காசிப் என்பவர் இசையமைத்துள்ளார்.