காக்கா முட்டை ரமேஷ் திலக்குடன் இணையும் காமெடி நடிகர் யாரெனு தெரியுமா

       பதிவு : Oct 31, 2017 18:08 IST    
காக்கா முட்டை ரமேஷ் திலக்குடன் இணையும் காமெடி நடிகர் யாரெனு தெரியுமா

இப்பொழுது காமெடிகளில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் ரமேஷ் திலக், இவர் நடித்த 'காக்கா முட்டை' படத்தின் மூலம் பேசப்படும் அளவிற்கு பிரபலமானார். ரமேஷ் பேசப்படும் வசனம் பொதுவானதாகவும் அனைவரும் கவரும் வகையிலும் அமைந்து விடுகிறது.    

ரமேஷ் திலக் இப்பொழுது மெகா ஸ்டார், முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். டிக் டிக் டிக், காலா, இமைக்கா நொடிகள் போன்ற படங்கள் இவர் நடிப்பில் வெளிவர இருக்கின்றனர். இந்நிலையில் காமெடிகளில் கலக்குவதோடு வில்லன் மற்றும் திருநங்கை கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு ஆர்வம் அதிகமாக இருப்பதாக கூறியுள்ளார். 

 

மேலும் பெண் வேடத்தில் நடிப்பது மிகவும் கடினமான செயல், இதில் முன்னணி நடிகர்கள் பலர் நடித்து நல்ல வரவேற்பினை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.    

இந்த படங்களுக்கு பிறகு விஜய் சேதுபதி மற்றும் கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்க இருக்கும் படத்தில் கமிட்டாகி இருப்பதாக ரமேஷ் திலக் கூறினார். இதனை தொடர்ந்து 'காக்கா முட்டை' படத்தின் துணை இயக்குனர்களில் ஒருவரான நட்டு தேவ் இயக்கம் படத்தில் யோகி பாபுவிடம் இணைந்து முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். சென்னையை சுற்றி எடுக்க இருக்கும் இப்படத்தில் காமெடிகள் அதிகளவு இடம் பெற்றுள்ளது.   

 

 


காக்கா முட்டை ரமேஷ் திலக்குடன் இணையும் காமெடி நடிகர் யாரெனு தெரியுமா


செய்தியாளர் பற்றி

விஷுவல் மீடியா துறையை சேர்ந்த மீனா ஸ்ரீ எழுத்து மற்றும் கலை துறையில் ஆர்வமாக உள்ளார். மீனா, உலகம் முழுவதும் புதிய விஷயங்களைப் பற்றி கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். நமது கற்றலுக்கு தேவையான விஷயங்கள் அனைத்தும் நம்மை சுற்றியுள்ள உலகத்திலிருந்தே கிடைக்கும் என நினைப்பவர். மேலும் இவர் சினிமா மற்றும் திரைப்பட தொடர்பான செய்திகளை நேசித்து வருகிறார். ... மேலும் படிக்க

meena shree

மீனா ஸ்ரீஎழுத்தாளர்