கரூர் சினிமாஸில் குறைந்த கட்டணத்தில் தொடங்கியது காலா டிக்கெட் புக்கிங்

       பதிவு : Jun 02, 2018 11:25 IST    
சூப்பர் ஸ்டாரின் காலா படம் வெளியாவதற்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் இந்த படத்தின் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் தற்போது கரூர் சினிமாஸில் குறைந்த கட்டணமாக 118 ரூபாயில் துவங்கியுள்ளது. சூப்பர் ஸ்டாரின் காலா படம் வெளியாவதற்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் இந்த படத்தின் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் தற்போது கரூர் சினிமாஸில் குறைந்த கட்டணமாக 118 ரூபாயில் துவங்கியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் இன்னும் 5 நாட்களில் வெளியாகவுள்ள படம் 'காலா'. வரும் ஜூன் 7ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தின் டிக்கெட் முன்பதிவு கரூர் சினிமாஸில் தற்போது ஆரம்பமாகியுள்ளது. உலகம் முழுவதும் வெளியாகவுள்ள சூப்பர் ஸ்டார் படத்திற்கு 1000, 2000 என்ற கணக்கில் டிக்கெட் கட்டணம் வசூல் செய்கின்றனர்.

ஆனால் கரூர் சினிமாஸில் குறைந்த கட்டணமாக 118 ரூபாயில் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் தற்போது வசூலிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதலாவதாக தொடங்கப்பட்ட காலா டிக்கெட் புக்கிங், தொடங்கிய சில மணிநேரத்தில் http://www.karurcinemas.com என்ற இணையதளத்தில் ரசிகர்கள் ஆர்வமாக புக்கிங் செய்து வருகின்றனர். 

 

சூப்பர் ஸ்டார் நடிப்பில் கபாலி படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக பா ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படம் மும்பையில் தாராவி என்ற இடத்தில் மக்களுக்கு உள்ள பிரச்சனைகளை எடுத்துரைக்கும் விதமாக காலா படம் உருவாகியுள்ளது. இசைமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

2.0 படத்தை தொடர்ந்து காலா படத்தையும் லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் சமுத்திரக்கனி, நானே படேகர், ஈஸ்வரி ராவ், ஹுமா குரேஷி, அருள்தாஸ், அஞ்சலி பட்டில் போன்ற பல திரை பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை, டீசர், ட்ரைலரை தொடர்ந்து இந்த படத்தில் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

 


கரூர் சினிமாஸில் குறைந்த கட்டணத்தில் தொடங்கியது காலா டிக்கெட் புக்கிங்


செய்தியாளர் பற்றி

விக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார். ... மேலும் படிக்க

Vignesh writer and reporter

விக்னேஷ்செய்தியாளர்