Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

காயம்குளம் கொச்சுண்ணி படத்தில் மோகன்லால் கதாபாத்திரம்

kayamkulam kochunni movie mohanlal character

நடிகர் மற்றும் தயாரிப்பாளரான மோகன்லால் நடிப்பில் இறுதியாக 'வில்லன்' படம் வெளியானது. இந்த படம் விஷால் மலையாளத்தில் அறிமுகமான முதல் படமாகும். இதனை தொடர்ந்து மோகன்லால் நடிப்பில் ஓடியன், நீராழி போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதற்கிடையே தற்போது நடிகர் நிவின் பாலி நடிப்பில் உருவாகி வரும் 'காயம்குளம் கொச்சுண்ணி' படத்தில் இணைந்துள்ளார்.

இந்த படம் 19-ஆம் நூற்றாண்டில் காயம்குளம் பகுதியில் வாழ்ந்த கொச்சுண்ணி என்பவரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகி வருகிறது. கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு உடுப்பி, கர்நாடகா, ஸ்ரீலங்கா போன்ற இடங்களில் நடந்து வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பில் மோகன்லால் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தில் மோகன்லால் கதாபாத்திரம் குறித்த அறிவிப்பை நடிகர் நிவின் பாலி தற்போது வெளியிட்டுள்ளார். நிவின் பாலிக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடித்து வரும் இந்த படத்தில் மோகன்லால் 'இதிக்கரபக்கி' என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது இவருடைய கதாபாத்திரம் சம்பந்தப்பட்ட புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த படத்தில் மோகன்லால், கொச்சுண்ணியின் கொள்ளை சம்பவத்தில் உதவியாளர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து மோகன்லால், 'ஓடியன்' படத்தில் ஓடியன் மாணிக்யன் கதாபாத்திரத்திலும், இயக்குனர் அஜோய் வர்மா இயக்கத்தில் 'நீராழி' படத்திலும் நடித்து வருகிறார். இதில் 'நீராழி' படம் வரும் மே மாதம் 4-ஆம் தேதியும், 'ஓடியன்' படம் வரும் அக்டோபர் மாதம் 18-ஆம் தேதியும் திரைக்கு வரவுள்ளது.

காயம்குளம் கொச்சுண்ணி படத்தில் மோகன்லால் கதாபாத்திரம்