ads

கீ படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீடு

kee audio and trailer release at january 19th

kee audio and trailer release at january 19th

நடிகர் ஜீவா நடிப்பில் தற்போது உருவாகிவரும் படம் 'கீ'. இந்த படத்தை இயக்குனர் காலீஸ் எழுதி இயக்குகிறார். இவர் இயக்குனர் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர். இந்த படத்தை 'குளோபல் இன்போடெய்ன்மெண்ட்' சார்பில் மைக்கல் ராயப்பன் தயாரித்து வருகிறார். அபிநந்தன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை நகுரன் மேற்கொள்கிறார். இந்த படத்தில் நடிகர் ஜீவாவிற்கு ஜோடியாக நடிகை நிக்கி கல்ராணி நடித்து வருகிறார். 

மேலும் இவர்களுடன் ஆர்ஜே பாலாஜி, அனைக்கா சொட்டி, கோவிந்த் பத்மசூர்யா, ராஜேந்திர பிரசாத், சுஹாசினி, மனோபாலா, மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இணைந்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தை தணிக்கை வாரியத்திற்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழு இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தெரிவித்துள்ளது. காமெடி கலந்த குடும்ப படமாக உருவாகி வரும் இப்படத்தினை வருகிற பிப்ரவரி மாதம் 9ம் தேதி வெளியிட உள்ளனர். மேலும் இதற்கு முன்னதாக வெளிவந்த போஸ்டர், டீசர் மற்றும் ‘ராஜா பாட்டு – பத்திக்குச்சு பாத்தியா’ என இரு பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் அனைத்து இசை மற்றும் ட்ரைலர் வருகிற 19ம் தேதி வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

கீ படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீடு