ads

புரூஸ் லீயின் வாழ்க்கை வரலாற்று படமான 'லிட்டில் ட்ராகன்'

புரூஸ் லீயின் வாழ்க்கை வரலாற்று படமான 'லிட்டில் ட்ராகன்'

புரூஸ் லீயின் வாழ்க்கை வரலாற்று படமான 'லிட்டில் ட்ராகன்'

ஹாலிவுட் பிரபலங்களுக்கு  சவால்விட்டு தனது திறமையில் நேரடியாக திரைக்களத்தில் குதித்தவர் புருஸ்லீ. திரையுலகில் 1970-ஆம் ஆண்டுகளில் இவருடைய ஆதிக்கம் தான் இருந்தது. இவருடைய மரணத்தில் பல்வேறு மர்மங்கள் கிளம்பியது. தற்போது வரை இந்த மர்மம் தீர்க்கப்படாமலே உள்ளது. தற்போது நடிகர் ப்ரூஸ் லீயை மையமாக வைத்து பல்வேறு கதைகள் வந்திருந்தாலும் அவரது வாழ்க்கை வரலாறு இதுவரை படமாக்க படாமலே இருந்தது.

தற்போது 71 வயதான பாலிவுட் இயக்குனர் சேகர் கபூர் முதன்முறையாக புருஸ்லீ வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கி வருகிறார். பலத்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் இந்த படத்திற்கு 'லிட்டில் டிராகன்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம் சீன மொழியில் தற்போது உருவாகி வருகிறது. இதுகுறித்து சேகர் கபூர் பேசியபோது,’இந்த படத்தின் கதையை புருஸ்லியின் மகளான ஷன்னான் லீ எழுதியுள்ளார். இதற்கு  நான் திரைக்கதை அமைக்கிறேன். இந்திய திரையுலகத்திற்கு சீனாவில் மாபெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இதனை ‘தங்கல்’ என்ற இந்தி படம் நிரூபித்தது.

புருஸ்லீயின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட இந்த  படத்தில் புதுமுக நடிகர்கள் நடித்து வருகின்றனர். ஹிந்தி நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத்தும் இந்த படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்காக நான் கிட்டத்தட்ட 15 வருடங்களாக உழைத்து வருகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. புரூஸ் லீயின் ரசிகர்கள் உலகெங்கும் நிறைந்துள்ளனர். பல்வேறு இளைஞர்கள் இவரை முன்மாதிரியாக வைத்து செயல்பட்டு வருகின்றனர். 

புரூஸ் லீயின் வாழ்க்கை வரலாற்று படமான 'லிட்டில் ட்ராகன்'

புரூஸ் லீயின் வாழ்க்கை வரலாற்று படமான 'லிட்டில் ட்ராகன்'