மதுர வீரன் படத்திற்கு யு சான்றிதழ்
மோகன்ராஜ் (Author) Published Date : Jan 06, 2018 10:53 ISTபொழுதுபோக்கு
நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் 'சகாப்தம்' படத்தின் மூலம் திரையுலகிற்கு நாயகனாக அறிமுகமானார். இப்படத்தினை தொடர்ந்து தற்பொழுது தமிழ் நாட்டின் பாரம்பரிய வீரத்தின் ஒன்றான ஜல்லிக்கட்டு சாகசத்தை மையமாக கொண்டு ஒரு புது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இயக்குகிறார். இவர் சகுனி, சேட்டை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, சண்டி வீரன் தற்பொழுது உருவாக்கி கொண்டிருக்கும் விமலின் 'மன்னர் வகையறா' போன்ற படங்களில் ஒளிப்பதிவு பணியில் ஈடுபட்டிருந்தது குறிப்பிட்ட தக்கது.
வி.ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தின் சிங்கிள் டிராக்கை சில நாட்களுக்கு முன்பு நடிகர் சமுத்திரக்கனி வெளியிடத்தினை தொடர்ந்து விஜயகாந்த் படத்தின் ரிலீஸ் தேதியை தெரிவித்தார். அதற்கு அடுத்தபடியாக படத்தின் 'நெஞ்சிக்குள்ளே' என தொடங்கும் பாடலை பேட்மிட்டன் வீராங்கனை பீவி சிந்து வெளியிட்டத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் ட்ரைலரை வெளியிட்டார். இவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றதோடு படத்தின் எதிர்பார்ப்பையும் அதிகரித்திருந்தது. பொங்கல் விருந்தாக வெளியிட இருக்கும் இப்படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாக படக்குழு அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளது.