ads
முதன்முறையாக சீனாவில் வெளியிடவுள்ள முதல் தமிழ் படம் மெர்சல்
விக்னேஷ் (Author) Published Date : Aug 10, 2018 17:52 ISTபொழுதுபோக்கு
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி பல விமர்சனங்களுக்கு உள்ளாகி, பல விருதுகளை குவித்த படம் 'மெர்சல்'. இந்த படத்தின் மூலம் நடிகர் விஜய் கோலிவுட், பாலிவுட் சினிமாவை தாண்டி ஹாலிவுட் சினிமாவிலும் பேசப்படும் நடிகராக உயர்ந்துள்ளார். இந்த படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ள விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று நல்ல வசூல் சாதனையும் புடைத்திருந்தது. இந்நிலையில் தற்போது இந்த படத்தை சீனாவிலும் வெளியிட உள்ளனர். தமிழ் சினிமா வரலாற்றிலே ஒரு தமிழ் படம் சீனா திரையரங்குகளில் வெளியிடுவது இதுவே முதன் முறையாகும். சமீபத்தில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த சர்வதேச நடிகர் என்ற விருதுக்கும் மெர்சல் படத்தின் மூலம் IARA விருதுக்கு தேர்வாகியிருந்தார். இதனை தொடர்ந்து சீனாவில் வெளியிடப்படும் இந்த படம் மற்றொரு வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது.
மேலும் இந்த படம் சிறந்த நடிகர், சிறந்த வில்லன், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த இயக்குனர் போன்ற 52 விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டு 32 விருதுகளை வென்றுள்ளது. இந்த படத்தினை சீனாவின் முன்னணி நிறுவனமான ஹச்ஜிசி என்டர்டெய்ன்மெண்ட் என்ற நிறுவனம் இந்த படத்தினை பிரமாண்டமாக வெளியிட உள்ளது. இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் அல்லது 2019 ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகவுள்ளது.