ads

எம்ஜி ஆரின் கனவு நிறைவேறாத படம் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ

kizhakku africavil raju movie first look posters

kizhakku africavil raju movie first look posters

நடிகர் எம்ஜிஆர் 1936-ஆம் ஆண்டு வெளிவந்த 'சதிலீலாவதி' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து உலக அளவில் நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் எண்ணற்ற படங்களில் பணியாற்றியுள்ளார். இவருடைய கால கட்டத்தில் யாரும் கண்டிராத மாபெரும் ரசிகர் வட்டாரத்தை பிடித்திருந்தார். இவருடைய நடிப்பில் இன்னும் முடிக்கப்படாத வெளியிடப்படாத படங்கள் உத்தம புத்திரன், மலை நாட்டு இளவரசன், ஏழைக்கு காவலன், அட்வகேட் அமரன், கிழக்கு ஆபிரிக்காவில் ராஜு, மக்கள் என் பக்கம் போன்ற படங்கள் உள்ளது.

இதில் 'கிழக்கு ஆபிரிக்காவில் ராஜு' படம் 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வந்தது. இந்த படத்தை காமெடி நடிகரான ஐசரி வேலன் என்பவர் தயாரித்திருந்தார். தற்போது நடிகர் எம்ஜிஆர் திட்டமிட்டு, தொடரமுடியாத அந்த படத்தை மறைந்த ஐசரி வேலனின் மகனான ஐசரி கணேஷ் தயாரிக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்தில்அனிமேஷன் தோற்றத்தில் முழுக்க முழுக்க எம்ஜிஆர் நடிக்கிறார். இந்த படத்தில் காமெடி கதாபத்திரத்தில் ஐசரி கணேஷ் தந்தையான மறைந்த ஐசரி வேலன் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம் போன்றவற்றை அருள்மூர்த்தி  மேற்கொள்கிறார். கவிஞர் வைரமுத்து பாடல் வரிகளில் இசையமைப்பாளர் டி இமான் இசையமைக்கிறார். நடன இயக்குனராக ராஜு சுந்தரம், சண்டை காட்சி வடிவமைப்பாளராக ராக்கி ராஜேஷ் ஆகியோர் பணியாற்றுகின்றனர். இந்த படத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இது குறித்து ஐசரி கணேஷ் கூறும்போது "என்னுடைய தந்தை ஐசரி வேலன் எம்ஜிஆர் மீது அளவுகடந்த அன்பு கொண்டவர். எம்ஜிஆர் தான் தமக்கெல்லாம் என்று நினைத்து வாழ்ந்தவர்.

எம்ஜிஆர் மற்றும் என் தந்தையின் கனவு நிறைவேறாத படம் 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு'. இப்படிப்பட்ட கலைஞர்களின் கனவு நிறைவேறாமல் போகக்கூடாது என்பதால் தான் இந்த படத்தை நான் தயாரிக்கிறேன். இந்த படத்தை எனது நிறுவனமான வேல்ஸ் பிலிம் இன்டெர்னசனல் நிறுவனமும், நடிகர் பிரபு தேவா ஸ்டுடியோஸும் இணைந்து தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் தொடக்க விழா எம்ஜிஆரின் 101-வது பிறந்த நாளில் நடக்கவுள்ளது. இந்த படம் இவருடைய 102-வது பிறந்த நாளான 17-01-2019 அன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது." என்று தெரிவித்துள்ளார். தற்போது இந்த படத்தின் போஸ்டர்கள் வெளிவந்து எம்ஜிஆர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

kizhakku africavil raju movie first look posterskizhakku africavil raju movie first look posters