ads
மோகன்லாலின் இளமையான தோற்றம் வைரலாகும் புகைப்படம்
யசோதா (Author) Published Date : Dec 17, 2017 11:59 ISTபொழுதுபோக்கு
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக சிறந்து விளங்கும் மோகன்லால் பல வெற்றி படங்களை கொடுத்து மலையாள திரையுலகில் மட்டும் இல்லாமல் இந்திய அளவில் பிரபலமான மிக பெரிய முன்னணி நடிகராக சிறந்து விளங்குகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த 'வில்லன்' படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த வெற்றி படத்தினை தொடர்ந்து தற்பொழுது 'ஓடியன்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
ஸ்ரீகுமார் மேனன் இயக்கும் இப்படத்தில் மோகன்லால் 30 வயதினை கொண்ட இளைஞனாக நடிக்கிறாராம். இதன் காரணத்தினால் இப்படத்திற்காக உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான தோற்றத்தில் இருப்பதாக தகவல் வந்திருந்தது. இந்நிலையில் நேற்று முந்தினம் விமான நிலையத்தில் எடுக்க பட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. இதனை அடுத்து இன்று ஒரு புது வித தோற்றத்தில் மோகன்லாலின் புகைப்படம் வைரலாக துவங்கியுள்ளது. இந்த புகைப்படத்தை மோகன்லால் அவரது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் இளமையான தோற்றத்தில் காணப்படுகிறார்.
mohanlal odiyan movie stills
mohanlal odiyan movie stills