Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

மலேசியாவில் பிரமாண்டமாக நடைபெறவுள்ள 'நட்சத்திர விழா 2018'

natchathira vizha 2018

'நட்சத்திர விழா 2018' அடுத்த ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி மலேசியாவில் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜாலில் மைதானத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை 14-ஆம் தேதி தொடங்கியது. விற்பனை தொடங்கிய 12 மணிநேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது. விற்பனை தொடங்கிய அடுத்த 12 மணிநேரத்தில் 15,000 டிக்கெட் விற்பனை முடிவடைந்தது இதுவே முதன் முறையாகும். இந்த டிக்கெட்டுகள் 10 ரிங்கிட் முதல் 30 ரிங்கிட் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 300 க்கும் மேற்பட்ட திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்கின்றன. 

இதில் தென்னிந்திய நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர்கள், நடன கலைஞர்கள் உள்ளிட்டோர் மலேசியா கலைஞர்களுடன் இணைந்து இந்த நட்சத்திர விழாவில் பங்கேற்க உள்ளனர். இந்த விழாவில் முக்கியமாக திரையுலக நட்சத்திரங்களுக்கும், மலேசியா கலைஞர்களுக்கும் கிரிக்கெட் போட்டி, கால்பந்து போட்டி போன்றவை நடைபெற உள்ளது. இதனை காண 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் புக்கிட் ஜாலில் மைதானத்தில் ஒன்றிணைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசியாவிலேயே மிக அதிகமான திரையுலக நட்சத்திரங்களை கொண்ட நிகழ்ச்சி இந்த 'நட்சத்திர விழா 2018' அமையும் என நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அனைத்து திரையுலகையும் மிரள வைக்கும் விழாவாகவும், பல்வேறு மலேசியா கலைஞர்கள் அரங்கத்தை அதிர வைக்க உள்ளனர் என்று மை ஈவென்ட்ஸ் இண்டெர்னேஷனல் குழுமத்தின் தலைமை செயல்முறை அதிகாரி சாஹூல் ஹமீட் டாவூட் தெரிவித்துள்ளார். 

மேலும் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல், சூர்யா,விஜய் சேதுபதி, விஷால், சிவகார்த்திகேயன், நயன் தாரா, தமன்னா, மோகன்லால், நாகர்ஜூன், மம்முட்டி, போன்ற தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்பட நட்சத்திரங்களுடன் இசையமைப்பாளர்கள் ஹரிஸ் ஜெயராஜ், அனிரூத்,ஹரிசரண், ஸ்வேதா மோகன், ரஞ்சித், நரேஷ் அய்யர், ஸ்ரீகாந்த், ஜிவி பிரகாஷ், இமான், தமன், பாடகர்கள் கார்த்திக், சின்மயி உட்பட மேலும் பலர் அந்த நட்சத்திர விழாவில் பங்கேற்க உள்ளனர். முன்னணி நட்சத்திரங்கள் இவ்விழாவில் பங்கேற்பதாக தெரிவித்து சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

மலேசியாவில் பிரமாண்டமாக நடைபெறவுள்ள 'நட்சத்திர விழா 2018'