Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

வெளியானது நயன்தாராவின் இமைக்கா நொடிகள் ட்ரைலர்

இயக்குனர் ஏஆர் முருகதாஸின் உதவி இயக்குனரான அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள இமைக்கா நொடிகள் படத்தின் ட்ரைலர் மற்றும் இசை தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் பிஸியான நடிகையான நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'இமைக்கா நொடிகள்'. இந்த படத்தில் அதர்வா நயன்தாராவுக்கு தம்பியாக நடித்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தில் அனுராக் கிஷியப் நடித்துள்ளார். ஹிந்தி சினிமாவின் பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான இவர் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாக உள்ளார்.

இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் இசையை இன்று படக்குழு வெளியிட உள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ட்ரைலரில் அனுராக் கிஷ்யப்பை எதிர்த்து சிபிஐ அதிகாரியாக நயன்தாராவும், அக்காவை காப்பாற்ற அதர்வாவும் போராடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. மேலும் அதர்வாவுக்கு ஜோடியாக ராசி கண்ணா நடித்துள்ளார்.

ஹிப் ஹாப் ஆதி இசையமைப்பில் இந்த படத்தின் பின்னணி இசையும் பாடல்களும் படத்தின் வெற்றிக்கு பக்க பலமாக இருக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த படத்தை ஏஆர் முருகதாஸின் உதவி இயக்குனரான அஜய் ஞானமுத்து எழுதி இயக்கியுள்ளார். நயன்தாராவுக்கு ஜோடியாக விஜய் சேதுபதி மீண்டும் இணைந்து நடித்துள்ள இந்த படம் வரும் செப்டம்பரில் வெளியாக உள்ளது.

வெளியானது நயன்தாராவின் இமைக்கா நொடிகள் ட்ரைலர்