Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

அறிவழகன் இயக்கத்தில் நயன்தாராவின் சைக்கோ த்ரில்லர்

nayanthara new psychological thriller movie

'ஈரம்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் அறிவழகன் அதன் பின்னர் வல்லினம், ஆறாது சினம், குற்றம் 23 போன்ற வெற்றி படங்களை இயக்கியிருந்தார். இதில் குற்றவியல் சாகசத்தை மையமாக கொண்டு உருவாக்கிய 'குற்றம் 23' படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சனங்கள் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதற்கு அடுத்தபடியாக இயக்குனர் அறிவழகன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் சைக்காலஜிக்கல் த்ரில்லர் படத்தினை எடுக்கவிருப்பதாகா நான்கு மாதத்திற்கு முன்னதாகவே அவரது ட்விட்டரில் பதிவு செய்து தகவலை வெளியிட்டிருந்தார். இது வரை படத்தின் படப்பிடிப்பு சம்மந்தமான எந்த வித தகவலையும் படக்குழு வெளிப்படுத்த வில்லை.        

இந்நிலையில் படத்தின் ப்ரீ - ப்ரொடெக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் சில நாட்களில் படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருப்பதாக இயக்குனர் அறிவழகன் தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் அறம் படத்தில்  நயன்தாராவிற்கு கிடைத்த வெற்றியை போன்று இந்த த்ரில்லர் படமும் அமையும் என்று உரக்கமான செய்தியை வெளிப்படுத்தியுள்ளார். நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மாயா, டோரா, வாசுகி போன்ற த்ரில்லர் படங்களை காட்டிலும் மாறுபட்ட வேடத்தை கையாவிருப்பதாக தகவல் வந்துள்ளது.   

தற்பொழுது நயன்தாரா இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நந்தமுறி பாலக்ரிஷ்ணாவின் 102வது படமான ஜெய் சிம்ஹா, இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் சில படங்களின் போஸ்டர், டீசர், ட்ரைலர், இசை போன்றவை வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.         

               

அறிவழகன் இயக்கத்தில் நயன்தாராவின் சைக்கோ த்ரில்லர்