ads
நிவின் பாலி ரிச்சி வெளியீடு
மீனா ஸ்ரீ (Author) Published Date : Oct 30, 2017 18:44 ISTபொழுதுபோக்கு
தமிழ் திரையுலகில் 'நேரம்' படத்தின் மூலம் அறிமுகமான மலையாள நடிகர் நிவின் பாலி, 'ப்ரேமம்' படத்தில் அதிகளவு ஹிட் அடித்ததினை தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்தார். இப்பொழுது கெளதம் ராமசந்திரன் இயக்கும் 'ரிச்சி' படத்தில் ரவுடி கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
'காஸ்ட் என் கிரேவ்' நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் கதாநாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். மேலும் லட்சுமி பிரியா, ஜிகே ரெட்டி, அஷ்வின் குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு இவர்களுடன் இணைந்து நடராஜன் சுப்ரமணியன், அசோக் செல்வன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் ட்ரைலர் முன்பே வந்தநிலையில் நிவின் பக்கா லோக்கல் ரவுடி தோற்றத்தில் நடித்திருப்பது தெரிகிறது. ட்ரைலர் அதிகளவு வரவேற்பினை ரசிகர்களுக்கிடையில் பெற்ற நிலையில் படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்கள் மகிழ்ச்சி அடையும் விதமாக படத்தினை வருகிற டிசம்பர் 1ம் தேதி வெளியிடுவதாக தெரிவித்துள்ளனர்.
ஆனந்த் குமார் தயாரிக்கும் இந்த படத்தில் பி. அஜனீஷ் லோக்நாட் இசையமைப்பாளராகவும், பாண்டி குமார் ஒளிப்பதிவும் மற்றும் அதுல் விஜய் எடிட்டிங் பணிகளையும் செய்துள்ளனர்.