ads

இன்றளவும் திரையரங்குகளில் சில காட்சிகள் ரத்துக்கு இதுதான் காரணம்

குறைந்தது 10 பேர் வந்தால் தாராளமாக திரையிடும் வாய்ப்பு உள்ளது, அதுவே முன்று பேர் மட்டுமே இருந்தால், பெரும் நஷ்டம் ஏற்படும்.

குறைந்தது 10 பேர் வந்தால் தாராளமாக திரையிடும் வாய்ப்பு உள்ளது, அதுவே முன்று பேர் மட்டுமே இருந்தால், பெரும் நஷ்டம் ஏற்படும்.

திரையரங்க உரிமையாளர்களின் போராட்டத்திற்கு பிறகும் எந்த ஒரு புதிய திரை படங்கள் வெளிவராததால், இன்றளவும் திரையரங்குகள் வெறிச்சோடி காணப்பட்டது. கடந்த 22-ஆம் தேதி மார்ச்சில் திரையரங்க உரிமையாளர்களின் போராட்டம் தமிழக அமைச்சர்கள் குடுத்து வாக்குறுதிகளால் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையில் போராட்டம் வாப்பஸ் பெறப்பட்டது. வரும் வாரத்தில் அரசின் அதிகார பூர்வ வெளியீட்டில் அணைத்து தகவுள்களும் வெளியிட்ட பின் தான் கேளிக்கை வரி முற்றிலும் அகற்றப்பட்டதா மற்றும் அணைத்து கோரிக்கைகள் எந்த அளவிற்கு திரையரங்க உரிமையாளர்களின் வேண்டுகோளின் படி நிறைவேற்றப்பட்டன என்று தெரிய வரும்.

இந்த வாரம் பசிபிக் ரிம் என்ற ஒரே ஆங்கில திரைப்படம் தமிழில் மொழி பெயர்க்க பட்டு வந்தது, மற்ற படங்கள் அனைத்தும் பழைய படங்களே. அந்த பழைய படங்களானது ஜில்லா , தர்மதுரை, வேதாளம், தானா சேர்ந்த கூட்டம் மற்றும் சமீபத்தில் வெளியான நாச்சியார், நாகேஷ் திரையரங்கம், கலகலப்பு 2 போன்ற படங்கள் திரையிட பட்டுவருகிறது. மற்ற மொழி படங்கள் ஓடினாலும் அதன் பார்வையாளர்கள் மிக குரைவாக உள்ளதால், ஒரு சில காட்சிகள் மட்டும் திரையிட படுகிறது. கோயம்பத்தூர், திருப்பூர், கரூர், மேட்டுப்பாளையம், ஈரோடு , பொள்ளாச்சி உள்ள சில திரையரங்குகள் காலை கட்சி திரையிட படுவதில்லை.

நமது நிருபர் விசாரித்ததில், இப்போது ஓடிக்கொண்டிருக்கும் படங்கள் அனைத்தும் ஏற்கனவே பல நாட்கள் ஓடி வெற்றி பெற்றவை, அவைகள் தனியார் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்ப பட்டுள்ளது. இத்திரைப்படங்கள் இணையத்திலும் ஒரிஜினல் பதிவில் உள்ளதாலும், டிக்கட் கட்டங்கள் உயர்வாக உள்ளதாலும் மக்கள் திரையரங்கிற்கு வர விரும்புவதில்லை.

குறிப்பாக பேரங்காடியில் இருக்கும் திரையரங்குகளின் டிக்கெட் கட்டணம் மிக அதிக விலையில் உள்ளதால், மக்கள் ஆர்வம் கட்டுவது இல்லை. குறிப்பிட்ட நபர்கள், அதாவது குறைந்தது 10 பேர் வந்தால் தாராளமாக திரையிடும் வாய்ப்பு உள்ளது, அதுவே முன்று பேர் மட்டுமே இருந்தால், பெரும் நஷ்டம் ஏற்படும் என்று தெரிவித்தார். திரையரங்குகள் நன்றாக ஓடவில்லை என்றாலும் அதில் வேலை செய்யும் நபர்களுக்கு ஊதியம் வழங்கித்தான் ஆகவேண்டும். இது ஒரு ஆரோகியமான சூழல் இல்லாததால், தயாரிப்பாளர்கள் அவர்களது போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவருவதே நல்லது. அனைவரின் ஒரே கேள்வி ஏன் நடிகர்களின் சம்பளத்தை குறைப்பதற்கு விஷால் அவர்கள் முன்னிறுத்தவில்லை மற்றும் இவர் நடிகராகவும் தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் இருப்பதால், இதில் ஆர்வம் காட்டவில்லையா ? என்பது தான்.

இன்றளவும் திரையரங்குகளில் சில காட்சிகள் ரத்துக்கு இதுதான் காரணம்