Policies

About Us விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் Disclaimer Policy Privacy Policy

Contact

Contact Us Twitter Facebook Google +
Copyright Stage3 News
2018. All Rights Reserved
ads

பொங்கலுக்கு மோதும் சூர்யா, விக்ரம், சுந்தர்சி, பிரபுதேவா

வரும் பொங்கல் தினத்தன்று ரசிகர்கள் விருந்தாக முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளிவரவுள்ளது. இதில் 2டி என்டர்டெய்ன்மெண்ட் மற்றும் ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தற்போது உருவாகிவரும் படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. இந்த படத்தின் கதாநாயனாக சூர்யா, கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நவரச நாயகன் கார்த்திக் நடிக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படம் ஜனவரி 12-இல் பொங்கலுக்கு வெளிவரவுள்ளது. 

இதனை அடுத்து துருவநட்சத்திரம் படத்தினை தொடர்ந்து விக்ரம் நடித்துவரும் படம் 'ஸ்கெட்ச்'. விஜய் சந்தர் இயக்கும் இப்படத்தில் தமன்னா, ஸ்ரீ பிரியங்கா, சூரி போன்றவர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடெக்சன் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மூவி பிரேம் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தின் பஸ்ட் லுக், டீசர் போன்றவை வெளிவந்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. புது வித கெட்டப்பில் களமிறங்கியுள்ள விக்ரம் படத்திற்கு எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடம் இருந்து அதிகரித்து உள்ளது. இந்த படமும் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. 

மேலும் இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் 'கலகலப்பு 2'. இந்த படத்தை அவ்னி சினிமேக்ஸ் சார்பில் குஷ்பு சுந்தர் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகர் ஜெய், ஜீவா, நிக்கி கல்ராணி, கேத்தரின் தெரசா, ராதா ரவி, யோகி பாபு, சிங்கம் புலி, வையாபுரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் சமீபத்தில்  நந்திதா ஸ்வேதாவும் இணைந்துள்ளார். இதனை அடுத்து இறுதிக்கட்டமாக  ஹைதராபாத்தில் உள்ள ராமோஷி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக படக்குழு ட்விட்டரில் பதிவு செய்து பிரியாவிடை கொண்டாடியது. சுந்தர்சியின் 'கலகலப்பு 2' பொங்கலன்று கலக்க வருகிறது.

ads

எஸ். கல்யாண் இயக்கத்தில் பிரபு தேவா நடிப்பில் உருவாகி வரும் 'குலேபகாவலி' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஹன்சிகா மோட்வானி நாயகியாக நடித்துள்ள இப்படத்தின் ரேவதி, சந்தியா முக்கிய வேடத்தில் இணைந்துள்ளனர். விவேக் மேர்வி இசையமைக்கும் இந்த படத்தினை கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. படத்தின் போஸ்டர்கள் முன்னதாகவே வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பொங்கல் திருநாளன்று வெளிவரவிருக்கும் இப்படத்தின் இசையை இன்னும் சில நாட்களில் வெளியிடுவதாக படக்குழு தெவித்துள்ளனர். இதன்மூலம் வரும் பொங்கலில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளிவருவதால் ரசிகர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு பஞ்சமே இருக்காது.  

பொங்கலுக்கு மோதும் சூர்யா, விக்ரம், சுந்தர்சி, பிரபுதேவா

செய்தியாளர் பற்றி
மூத்த எழுத்தாளர்
அடிப்படையில் தேவி ஒரு ஓவியர் மற்றும் பயணங்களை மிகவும் ரசிப்பவர். இயற்கையின் மீதும் தனது எழுத்து திறமையின் மீதும் சிறந்த ஆர்வம் கொண்டவர். இவர் இயற்கை வளங்களையும், மலை சார்ந்த இடங்களையும் நிறையவே நேசிக்கிறார். இவர் தான் சேகரித்த பல்வேறு தகவல்களையும், எண்ணங்களையும் மக்களுக்கு கொண்டு சேர்ப்பவர்.
1B, Commercial Site, TNHB,
HUDCO Colony, Peelamedu,
Coimbatore, Tamil Nadu
India - 641004.
9952748159 yasomohan.devi@gmail.com